முகம் எப்போதும் இளமையாகவும், அழகாகவும் இருக்க நீங்கள் செய்ய வேண்டிய எளிமையான பயிற்சிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சியை அன்றாடம் செய்வதால் தசைகள் வலுவாகும் மற்றும் முகம் வடிவம் பெறும்.
முகத்தின் அழகைக் கெடுக்கும் தொப்பைக் கொழுப்பைக் கரைக்க மிகவும் சிரமப்படுகிறீர்களா..இனி இந்த கவலை வேண்டாம். தினசரி வீட்டில் உங்களுக்கு வசதியான நேரத்தில் இந்த எளிமையான முக யோக பயிற்சியை மேற்கொள்ளுங்கள். இது உங்கள் முகத்தின் தசைகளை வலுப்படுத்திக் கூடுதல் முக அழகைப் பெறுவீர்கள்.
Chin lift : உங்கள் கன்னத்தை மேல் நோக்கி உயர்த்தி உங்கள் கழுத்தை முன்புறமாக நீட்டவும். இந்த போஸை 10 வினாடிகள் வைத்திருக்கவும். இதுபோன்று அன்றாடம் செய்து வாருங்கள். இது உங்கள் தாடை கீழ் இருக்கும் இரட்டை கன்னத்தைக் குறைக்கும்.
Fish face : மீன் போன்ற முகத்தை வைக்கவும். அன்றாடம் இதனைக் காலை மற்றும் மாலை செய்யும். இப்படிச் செய்வதால் உங்கள் முகத்தில் இருக்கும் தசைகளை டோனிங் செய்வதற்கு உதவுகிறது.
Face stretch : வாயை அகலமாகத் திறந்து முகத்தை நீட்டி உங்கள் கைகள் வைத்து புருவங்களை உயர்த்தவும். இது உங்கள் முகத்தின் தசைகளை வலுவாக்கும்.
Cheek puff : உங்கள் வாயில் காற்றை நிரப்பி பலூன் வாய்போல் வைக்கவும். இது உங்கள் கன்னத்தில் இருக்கும் கொழுப்பைக் கரைத்து முகத் தோற்றத்தை மேம்படுத்துகிறது.
Jaw release : மெல்லுவதுபோன்று உங்கள் தாடையைத் திறந்து மூடவும். இந்த பயிற்சி தினமும் நீங்கள் செய்து வந்தால் உங்கள் முகம் பொலிவாகும். மேலும் கூடுதல் அழகு பெறுவீர்கள்.
Neck strectches : தலையை ஒரு பக்கமாகத் திருப்பி மேல் நோக்கிச் சாய்க்கவும். இதனை 10 வினாடிகள் நீங்கள் தினமும் செய்து வாருங்கள். இது உங்களுக்கு முக அழகு மேம்படுத்தும் மற்றும் மன நிம்மதி கிடைக்கும்.
Chewing gum : தாடை தசைகளை வலுப்படுத்த இந்த பயிற்சி எளிதானது. ஆனால் இதனை அதிகமாகச் செய்யக்கூடாது. குறைவாகவே செய்ய வேண்டும்.
(பொறுப்பு துறப்பு: இங்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்தும் பொதுவான தகவல்கள் மற்றும் வீட்டு வைத்தியம் சார்ந்தவை. இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)