இந்தியாவின் முதல் சோலார் எலக்ட்ரிக் கார் அறிமுகம்.. 250 கிலோமீட்டர் வரை செல்லுமாம்.. சிறப்பு அம்சங்கள் இதோ!

வேவ் மொபிலிட்டி நிறுவனம் சூரிய சக்தியில் இயங்கும் கார்களை அறிமுகப்படுத்தி உள்ளது. 

புனேவை சேர்ந்த வேவ் மொபிலிட்டி நிறுவனம் இந்தியாவில் முதல் சூரிய சக்தியில் இயங்கும் காரினை அறிமுகப்படுத்தியுள்ளது. நோவா, ஸ்டெல்லா மற்றும் வேகா ஆகிய மூன்று வகைகளில் அறிமுகப்படுத்திய இந்த கார்களின் விவரத்தை இத்தொகுப்பில் காணலாம்.  

 

1 /6

நோவா, ஸ்டெல்லா மற்றும் வேகா என்ற மூன்று வகைகளில் அறிமுகப்படுத்திய நிலையில், இந்த கார்கள் முறையே 9 kWh, 12 kWh மற்றும் 18 kWh என்ற வெவ்வேறு பேட்டரி பேக்குகளுடன் வருகின்றன. நோவா மற்றும் ஸ்டெல்லா 16 PS பவர் அவுட்புட்டை வழங்கினாலும், வேகா 20 PS-ஐ வெளியேற்றுகிறது. 

2 /6

இந்த ஈவா வகை கார்கள் ஒரு முறை சார்ஜ் செய்யப்பட்டால் 250 கிலோமீட்டர் வரை செல்லக்கூடியதாக உள்ளது. 

3 /6

இந்த கார்களின் மேற்பகுதியில் சோலார் பேனல் பொருத்தப்பட்டுள்ளது. இது சூரிய சக்தி மூலம் காரை சார்ஜ் செய்கிறது. இது மணிக்கு 70 கிலோ மீட்டர் வரை செல்லக்கூடியதாகும் மற்றும் 5 விநாடிகளில் 0-40 கிலோ மீட்டர் வேகத்தை எட்டும்.

4 /6

இந்த கார்கள் இரட்டை திரை அமைப்பு (தொடுதிரை மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர்), ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு அதாவது உங்கள் ஆண்ட்ராய்டு போனை உங்கள் காரின் பொழுதுபோக்கு அமைப்புகளுடன் இணைக்கிறது. அதேபோல் மனுவல் ஏசி வசதியை இந்த கார்கள் கொண்டுள்ளது. 

5 /6

நோவா, ஸ்டெல்லா மற்றும் வேகா கார்கள் முறையே ரூ.3.25 லட்சம், ரூ.3.99 லட்சம் மற்றும் ரூ.4.49 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலைகள் அனைத்துமே எக்ஸ் ஷோரும் விலை என்பது குறிப்பிடத்தக்கது. 

6 /6

இந்த கார் 2026ஆம் ஆண்டு விற்பனைக்கு வரும் நிலையில், இதனை 5,000 ரூபாய் கொடுத்து முன்பதிவு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.