உலகின் மிக அதிக சம்பளம் வாங்கும் தொழிலதிபர்களின் விபரங்களை இத்தொகுப்பில் பார்க்கலாம்.
உலகின் மிக அதிக சம்பளம் வாங்கும் சிஇஓ-வாக எலான் மஸ்க் உள்ளார். ஆண்டுதோறும் சுமார் 23.5 பில்லியன் டாலர் சம்பாதிக்கிறார். இவருக்கு அடுத்தப்படியாக டிம் குக், சுந்தர் பிச்சை அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர்.
டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான எலாம் மஸ்க் இப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். இவர் எலக்ட்ரிக் வாகனத் துறையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியவர். இவரது வருமானம் ஆண்டுக்கு 23.5 பில்லியன் டாலராக உள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.2.03 லட்சம் கோடியாகும்.
ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை அதிகாரியான டிம் குக் தான் எலான் மஸ்கிற்கு அடுத்தபடியாக உள்ளார். அவரது ஆண்டு வருமானம் 770.5 மில்லியன் டாலராக உள்ளது. இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 65 கோடி ரூபாய் ஆகும்.
கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் தலைமை நிர்வாகியான சுந்தர் பிச்சை ஆண்டிற்உ 280 மில்லியன் டாலரை சம்பாதிக்கிறார். இவர் இந்தியாவில் பிறந்தவர் ஆவார்.
ஜென்சன் ஹுவாங் என்விடியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார். இந்நிறுவனம் கேமிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகளுக்கான கிராபிக்ஸ் செயலாக்க அலகுகளை வடிவமைப்பதில் புகழ்பெற்றதாகும். இவர் ஆண்டிற்கு 561 மில்லியன் டாலர் சம்பாதிக்கிறார்.
பொழுதுபோக்கு துறையில் சிறந்து விழங்கும் நெட்ஃபிளிக்ஸின் இணை நிறுவனம் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ரீட் ஹேஸ்டிங்ஸ் ஆண்டிற்கு 453.5 மில்லியன் சம்பாதிக்கிறார்.
ரெஜெனெரான் பார்மாசூட்டிகல்ஸ் என்பது ஒரு பயோடெக்னாலஜி நிறுவனம். இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி லியோனார்ட் ஷ்லீஃபர் ஆவார். இவர் 452.9 மில்லியன் டாலர் சம்பாதிக்கிறார்.
மைக்ரோசாப்டின் சிஇஒ சத்யா நாதெல்லா இந்நிறுவனத்தை கிளவுட் கம்ப்யூட்டிங்கிற்கு மாற்றியுள்ளார். இவரது ஆண்டு வருமானம் 309.4 மில்லியன் கோடியாகும்.