வெயிட் கூடாமல் இருக்க ஸ்ரீலீலா தினமும் 45 நிமிடம் ‘இதை’ செய்வாராம்! என்ன தெரியுமா?

Sreeleela Tips For Weight Loss : தென்னிந்திய திரையுலகில் வளர்ந்து வரும் இளம் கதாநாயகிகளுள் ஒருவராக இருப்பவர், ஸ்ரீலீலா. இவர், தன் உடல் எடையை எப்படி பராமறிக்கிறார் என்பது குறித்த விவரம், தற்போது வெளியாகி இருக்கிறது.

Written by - Yuvashree | Last Updated : Jan 20, 2025, 04:12 PM IST
  • வெயிட் ஏறாமல் இருக்க ஸ்ரீலீலா செய்யும் விஷயம்..
  • 45 நிமிடங்கள் ‘இதை’ செய்வாராம்..
  • என்ன தெரியுமா?
வெயிட் கூடாமல் இருக்க ஸ்ரீலீலா தினமும் 45 நிமிடம் ‘இதை’ செய்வாராம்! என்ன தெரியுமா? title=

Sreeleela Tips For Weight Loss : தென்னிந்திய திரையுலகில் தற்போது வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் ஸ்ரீலீலா. இதுவரை தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் தமிழகத்திலும் இவருக்கு நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர். திரையுலகத்திற்கு வந்த சில நாட்களிலேயே ஹிட் ஹீரோக்களுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார். அமெரிக்காவில் படித்து வளர்ந்த இவர், இப்போது பட வாய்ப்புகள் காரணமாக இந்தியாவிலேயே தங்கியிருக்கிறார். 23 வயதாகும் ஸ்ரீலீலா, தனது உடல் எடையை பராமரிக்க சரியான டயட் மற்றும் உடற்பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார். இது குறித்த முழுவிவரத்தை இங்கு பார்ப்போம்.

காலை உணவு: 

ஷூட்டிங் அல்லது பிற வேலைகள் என தனக்கு என்ன கமிட்மென்ட் இருந்தாலும், ஸ்ரீலீலா விட்டுக் கொடுக்காத ஒரு விஷயம் காலை உணவு. தினமும் ப்ரேக்ஃபாஸ்டில் இளநீர் குடிப்பதை இவர் தவிர்ப்பதில்லையாம். அதேபோல வெஜ் சாண்ட்விச் சாப்பிடுவர், கொழுப்பு குறைவாக உள்ள பால் கலந்த பழ சாறையும் குடிக்கிறாராம். சில சமயங்களில் சான்விச்சிற்க்கு பதிலாக பதிலாக, பழ சாலட்டை சாப்பிடுவார். இன்னும் சில நாட்களில், கியினாவோ மற்றும் நட்ஸ் கலந்த சீரியல்களை சாப்பிடுவார்.

மதிய உணவு: 

ஸ்ரீலீலா மத்தியானத்தில் பச்சை காய்கறிகளை சாப்பிட விரும்புவாராம். இதனுடன் பிரவுன் அரிசி மற்றும் பருப்பு வகைகள் ஏதேனும் ஒன்றை எடுத்துக் கொள்கிறார். கூடவே உடலில் நீர்ச்சத்துக் குறையாமல் இருக்க எலுமிச்சை சாறு அல்லது எலுமிச்சை டீ குடிப்பாராம்.

டின்னர்: 

ஶ்ரீலீலா, இரவில் வெஜ் சூப் மற்றும் சாலட் ஆகியவற்றை உட்கொள்வதாக கூறப்படுகிறது. எப்போதாவது இனிப்பு சாப்பிட வேண்டும் என்று தோன்றினால், இனிப்பு குறைவாக இருக்கும் ஏதேனும் ஒரு தின்பண்டத்தை சாப்பிடுவாராம். அதேபோல இவருக்கு காபி என்றாலும் எனக்கு ரொம்ப பிடிக்குமாம். அதனால் காபியுடன் சில பிஸ்கட்டுகளையும் சாப்பிட இவர் விரும்புவார் என கூறப்படுகிறது

உடற்பயிற்சி: 

உடல் எடையை கச்சிதமாக வைத்துக்கொள்ள அனைவருக்கும் உடற்பயிற்சி அவசியம். இதனைப் பின்பற்றும் ஸ்ரீலீலா, வாரத்தில் சில நாட்கள் HIIT உடற்பயிற்சிகளை மேற்கொள்வாராம். எடை தூக்குதல், ட்ரெட்மிலில் ஓடுதல் உள்ளிட்டவை இவருக்கு பிடித்த உடற்பயிற்சிகள் என கூறப்படுகிறது. இது இவரது கச்சிதமான உடலை கனக்கச்சிதமாக மாற்ற உதவுகிறது.

45 நிமிடம் செய்யும் விஷயம்..

நடிகை ஸ்ரீலீலாவுக்கு, உடற்பயிற்சியை தாண்டி பிடித்த இன்னொரு விஷயம் யோகாவாம். தனது மன மற்றும் உடல் நலனை பாதுகாப்பதற்காக இவர் தினமும் 45 நிமிடம் யோகா பயிற்சி மேற்கொள்வதாக கூறப்படுகிறது. இதற்காக தனியாக இவர் trainer வைத்திருப்பதாகவும், அவரின் அறிவுறுத்தல்களின்படி இவர் யோகா செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. என்ன வேலை இருந்தாலும் இதை செய்வதற்கு அவர் தவறுவதில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து செய்தல்: 

நடிகை ஸ்ரீலீலா, தனக்கு என்ன வேலை இருந்தாலும் உடலை பராமரிக்க தவறுவதில்லை. அவர் வேறு எங்கேயும் பயணம் மேற்கொண்டாலும், அல்லது ஷூட்டிங்கிற்காக வேறு ஊருக்கு சென்றாலும் தனது ஒர்க் அவுட்களை நிறுத்தவே மாட்டாராம். அதேபோல டயட்டையும் தொடர்ந்து கடைபிடித்து வருகிறார். ஒருவர் உடல் எடையை பராமரிக்க இதுபோல தான் செய்யும் விஷயங்களை தொடர்ந்து செய்ய வேண்டியது அவசியம் ஆகும்.

ஸ்ரீலீலாவுக்கு பிடித்த உடற்பயிற்சிகள்: 

ஸ்ரீலீலா, ஸ்குவாட்ஸ், புல் அப்ஸ், ஷோ பிரஸ் ஆகிய உடற்பயிற்சிகளை விரும்பி செய்வாராம். இவை கை, மார்பு மற்றும் தோள்பட்டைகளுக்கான உடற்பயிற்சிகள் ஆகும். இது அவரது தசைகளை தளர விடாமல் செய்ய உதவுகின்றன.

பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான மற்றும் வீட்டு வைத்தியம் சார்ந்த தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. இந்த தகவல்களை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை.

மேலும் படிக்க | உடல் எடையை குறைக்க நயன்தாரா ‘இதை’ குடிப்பாராம்! என்ன தெரியுமா?

மேலும் படிக்க | 4 மாதங்களில் வெயிட் லாஸ் செய்ய வரலட்சுமி செய்த 4 விஷயங்கள்! ரொம்ப சிம்பிள்..

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News