Budget 2025: 2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு இன்னும் சில வாரங்களே உள்ளன. இந்த பட்ஜெட் குறித்து பல தரப்பு மக்களிடம் பல வித எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. வர்த்தகங்கள், குறிப்பாக, ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பல வித கனவுகளோடு காத்திருக்கின்றன. வளர்ச்சிப் பாதையை முன்னெடுத்துச் செல்ல கொள்கைகளை நெறிப்படுத்த, ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மோடி 3.0 நிர்வாகத்தை பெரிதும் நம்பியுள்ளன.
ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் எதிர்பார்ப்புகள் என்ன? பட்ஜெட்டில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் நாடும் சலுகைகள் என்ன? இது குறித்து இந்த பதிவில் காணலாம்.
Budget 2025 Expectations: பட்ஜெட்டில் இந்திய ஸ்டார்ட்அப்களின் எதிர்பார்ப்புகள்
பொருளாதாரம் மீள்தன்மை மற்றும் சவால்கள் இரண்டின் அறிகுறிகளையும் காட்டுவதால், புதுமைகளை ஆதரிக்கும், நிதி அணுகலை எளிதாக்கும், மிகவும் சாதகமான வணிகச் சூழலை உருவாக்கக்கூடிய நடவடிக்கைகளை அரசிடமிருந்து ஸ்டார்ட்அப்கள் எதிர்பார்க்கின்றன. பிப்ரவரி 1, 2025 அன்று இந்திய நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்வார். பட்ஜெட்டில் ஸ்டார்ட்அப் சமூகம் எதிர்பார்க்கும் முக்கிய எதிர்பாப்புகளை இங்கே விரிவாக காணலாம்.
Ease of doing Business: வணிகம் செய்வதை எளிதாக்கும் நடவடிக்கைகள்
பிரதமர் நரேந்திர மோடி தனது பதவிக் காலத்தில் நாட்டில் வணிகம் செய்வதை எளிதாக்கும் நிலைமைகள் மேம்பட்டுள்ளதாக தொடர்ந்து கூறி வருகிறார். எனினும், இதில் பல சிக்கல்கள் இன்னும் உள்ளன. ஸ்டார்ட்அப்கள், குறிப்பாக உற்பத்தி அமைப்பில், எளிமையான அனுமதி அல்லது ஒப்புதலைப் பெறுவதற்கு, அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இணக்கச் சுமையைக் குறைப்பதன் மூலம் ஆரம்ப கட்ட ஸ்டார்ட்அப்களுக்கு அரசாங்கம் உதவக்கூடும் என நம்பப்படுகின்றது.
Tax Regime: எளிமைப்படுத்தப்பட்ட வரி முறை
பொதுமக்கள், தனிப்பட்ட வரி விகிதங்கள் குறைக்கப்பட வேண்டும் என விரும்புவதைப் போல, இணக்கச் சுமைகளைக் குறைக்கும் எளிமைப்படுத்தப்பட்ட வரி கட்டமைப்பை ஸ்டார்ட்அப்களும் எதிர்பார்க்கப்படுகின்றன. இதில் வரி விலக்குகள், பெருநிறுவன வரி விகிதங்களை திருத்துதல் மற்றும் இழப்புகளை ஈடுகட்டுதல் மற்றும் வர்த்தகத்தை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கான நடைமுறைகளை எளிதாக்குதல் ஆகியவை அடங்கும்.
Infrastructure: உள்கட்டமைப்பு மேம்பாடு
நாட்டின் பல பகுதிகளில் முதலீடுகள் அதிகரிப்பதை உறுதிசெய்ய அரசாங்கம் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொள்ள வேண்டும். அதிநவீன வசதிகள், கூட்டுப்பணி இடங்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கான அணுகல் கொண்ட தொடக்க மையங்களை உருவாக்குவது செயல்பாட்டு செலவுகளைக் கணிசமாகக் குறைக்கும். மேலும், புதிய முயற்சிகள் மற்றும் வளர்ச்சிக்கும் இது ஒரு நல்ல சூழலை வழங்கும்.
Emerging Technologies: வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் முதலீடு
செயற்கை நுண்ணறிவு (AI) என்பது பிரபலமான வார்த்தையாக மாறி வருகிறது. இந்திய அரசாங்கம் AI துணைகொண்டு முக்கிய முன்னேற்றங்களை அடைய வாய்ப்பு உள்ளது. இந்திய டிஜிட்டல் பொருளாதாரம் 2028 ஆம் ஆண்டுக்குள் $1 டிரில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு 2025 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் புதுமைகாணல் மற்றும் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
Intellectual Property Rights: அறிவுசார் சொத்துரிமைகள்
விரைவான காப்புரிமை செயலாக்கம், ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான குறைந்த கட்டணங்கள் மற்றும் அறிவுசார் சொத்துரிமை கல்விக்கான அதிக வளங்கள் உள்ளிட்ட அறிவுசார் சொத்துரிமைகளுக்கான (ஐபிஆர்) மேம்பட்ட ஆதரவை, நிதி அமைச்சரிடம் ஸ்டார்ட்அப்கள் எதிர்பார்க்கின்றன.
Credit Guarantee Scheme for Startups: கடன் அணுகல்
ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாதத் திட்டம் (CGSS) போன்ற திட்டங்கள் மூலம், குறிப்பாக MSMEகள் மற்றும் தொடக்க நிறுவனங்களுக்கு கடன் கிடைக்கும் தன்மையை மேம்படுத்துவது மிக முக்கியமானது. இது அதிக வட்டி கடன்களின் சுமை இல்லாமல் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் செயல்பாடுகளை அளவிட உதவும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ