TVK Vijay Speech In Parandhur Latest News Updates: பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு குழுவினரை சந்திப்பதற்கு வருகை தந்த நடிகர் விஜய், ஊருக்குள் வர தடை என கூறி அங்கு திறந்தவெளி வேனில் நின்று மக்கள் மத்தியிலும், தொண்டர்கள் மத்தியிலும் உரையாற்றினார். பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 900 நாள்களுக்கும் மேலாக தொடர்ந்து போராடி வருபவர்களை சந்தித்து, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று வருகை தந்தார். இந்த சந்திப்பு பரந்தூரில் உள்ள தனியார் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பரந்தூரில் விஜய்: ராகுல் என்று சிறுவனின் வீடியோ...
அந்த வகையில், அவர் திறந்தவெளி வேனில் நின்று கொண்டு கைக்காட்டிய படியே மண்டபத்தை நோக்கி சென்றுகொண்டிருந்த விஜய், திடீரென சாலையிலேயே தனது உரையை தொடங்கினார். அப்போது கூறிய அவர், "எனது முதல் பயணத்தை விவசாயிகளின் சந்தித்த பின்னரே தொடங்க வேண்டும் என நினைத்தேன். அதற்கு இதுதான் சரியான இடம். இங்கிருந்து எனது கள அரசியலை தொடங்குகிறேன். ராகுல் என்ற சிறுவன் பரந்தூர் விமான நிலையம் குறித்து பேசியது எனது மனதை உருக்கிவிட்டது. அதனால்தான் 910 நாள்களுக்கு மேல் போராடி வரும் உங்களை சந்திக்க வந்தேன். விவசாயிகள் நாட்டிற்கு மிக முக்கியமானவர்கள், உங்களுடன் நான் எப்போதும் இருப்பேன்" என்றார்.
மேலும் மாநாட்டிலேயே சொல்லியிருந்தேன் 1000 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களையும், 13 நீர் நிலைகளையும் அழிக்கும், சென்னையை மேலும் பாதிக்கும் இந்த பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என முதல் மாநாட்டிலேயே அறிவித்தோம். சுற்றுச்சூழல் பாதுகாப்பு தங்களது கொள்கை என்றும் சென்னை வருடாவருடம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படுவதற்கு புவி வெப்பமயமாதல் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது என்றும் விஜய் பேசினார். இத்தகைய சூழல் நிலவும் வேளையில், 90% நீர் நிலைகள், விவசாய நிலங்களை அழித்து விமானம் நிலையம் கொண்டு வருவது சரியானது இல்லை எனவும் விஜய் தெரிவித்தார். மேலும் இதனை தான் வாக்கரசியலுக்காக வருகிறேன் என்றார்.
மேலும் படிக்க | மீண்டும் உங்கள் ஊருக்கு வருவேன் - பரந்தூரில் கடைசியாக விஜய் சொன்ன வார்த்தைகள்!
பரந்தூரில் விஜய்: 'வளர்ச்சிக்கு எதிரானவன் நான் இல்லை'
மேலும் அவர் கூறுகையில்,"நான் வளர்ச்சிக்கு எதிரானவன் இல்லை. விமானம் நிலையம் வருவதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் இந்த இடத்தில் விமான நிலையம் வர வேண்டாம் என்றுதான் சொல்கிறோம். விவசாயிகள் பாதிக்கப்படாத இடங்கள், பாதிப்புகள் குறைவாக உள்ள இடங்களை தேர்வு செய்து அங்கு விமான நிலையத்தை அமைத்துக்கொள்ளுங்கள். அதேபோல், சில நாள்களுக்கு முன் தமிழ்நாடு அரசு மதுரை அரிட்டாப்பட்டியில் அமைய இருந்த டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது, அதை நான் வரவேற்கிறேன்.
ஆனால், தமிழ்நாடு அரசு அதே நிலைப்பாட்டை தானே பரந்தூருக்கும் எடுத்திருக்க வேண்டும். அரிட்டாப்பாட்டி மக்களை போல் தானே பரந்தூர் மக்களும்... அப்படிதானே அரசும் யோசித்திருக்க வேண்டும், ஆனால் அப்படி செய்யவில்லை. அப்படியென்றால், இங்கு விமான நிலையம் வருவதற்கு ஆட்சியாளர்களுக்கு ஏதோ லாபம் இருக்கிறது என்ற சந்தேகத்தை வரவழைக்கிறது.
பரந்தூரில் விஜய்: 'நாடகம் போடும் திமுக'
ஆட்சியாளர்களுக்கு சில கேள்விகளை கேட்க நினைக்கிறேன். நீங்கள் (திமுக) எதிர்க்கட்சியாக இருக்கும்போது 8 வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்தீர்கள், காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தீர்கள். இப்போது ஆட்சிக்கு வந்த பின் பரந்தூரில் விவசாயிகளுக்கு எதிராக செயல்படுகிறீர்கள். எதிர்க்கட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு ஆதரவு, ஆளுங்கட்சியானதும் எதிர்ப்பா...? நம்பும்படி நாடகம் ஆடுவதில் நீங்கள் கில்லாடிகள் ஆச்சே... இனி உங்கள் நாடகத்தை மக்கள் நம்ப மாட்டார்கள், இனி சும்மாவும் இருக்க மாட்டார்கள்... " என ஆளும் திமுகவை கடுமையாக விமர்சித்தார். ஒன்றிய, மாநில அரசுகள் இந்த விமான நிலையத்திற்கு ஆய்வு செய்து தேர்வு செய்த இடத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கையும் வைத்துள்ளார்.
விஜய்க்கு ஊருக்குள் வர தடை...?
மேலும், "நான் ஏகனாபுரம் ஊருக்குள் வந்து மைதானத்தில் மக்களை சந்திப்பதாகவே இருந்தது, ஆனால் எனக்கு அதற்கு அனுமதி அளிக்கவில்லை. ஊருக்குள் வர எனக்கு ஏன் தடை என தெரியவில்லை. அடுத்த முறை வரும்போது உங்கள் ஊருக்குள் வந்து உங்களை சந்திக்கிறேன்" என்றார்.
மேலும் படிக்க | அனல் பறந்த விஜய் பேச்சு!! பரந்தூரில் அவர் பேசிய விஷயங்கள் என்னென்ன? ஹைலைட்ஸ் இதோ..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ