வரும் ஜனவரி 20ம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பரந்தூர் மக்களை சந்திக்க காவல்துறை அனுமதி அளித்துள்ளது. மேலும் இதற்காக சில கட்டுப்பாடுகள் விஜய்க்கு விதிக்கப்பட்டுள்ளன.
சென்னையின் இரண்டாவது விமான நிலையமானது காஞ்சிபுரத்தை அடுத்த பரந்தூர் பகுதியில் அமையப்படவிருப்பதாக அறிவிப்பு வெளியானதில் இருந்து ஏகனாபுரம் கிராம மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராமத்தை தொடர்ந்து நாகப்பட்டு கிராமத்திலும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக தண்ணீர் தினத்தையொட்டி காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாபுரத்தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஐந்தாவது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வணிக பயன்பாட்டுக்காக நிலங்களை கையகப்படுத்தப்படும்போது, சம்மந்தப்பட்ட நிறுவனங்களின் லாபத்தில் நில உரிமையாளர்கள் குறிப்பிட்ட தொகையை பெறும் வகையில் சட்டம் இயற்ற வேண்டுமென என மாநில தகவல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
Parandur Airport: பரந்தூர் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 63வது நாளாக ஏகனாபுரத்தில் நடைபெற்ற கவன ஈர்ப்பு போராட்டத்தில் முதியவர்கள்,பெண்கள் திடீரென கண்ணீர் மல்க ஒப்பாரி வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது
பரந்தூர் விமான நிலையத்திற்கு கையகப்படுத்தும் நிலத்திற்கு சந்தை விலையைவிட மூன்றரை மடங்கு இழப்பீடு அதிகமாக வழங்கப்படும், அப்பகுதி மக்களுக்கு தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு வழங்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
Parandur Airport: விமான நிலையம் அமைய நிலம் வழங்க இருக்கும் விவசாயிகள் மற்றும் நில உடமைதாரர்களுக்கு உரிய மற்றும் சட்டப்படியான இழப்பீட்டுத் தொகை வழங்க இந்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் -அமைச்சர் மூர்த்தி
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.