1 ஹீரோவுடன் நடிக்க போட்டி போடும் 2 பிரபல நாயகிகள்! அவங்க யார் தெரியுமா?

Two Actress In Competition To Act In NC 24 Movie : தென்னிந்தியாவின் இரண்டு பெரிய நடிகைகளாக உலா வருபவர்கள், ஒரு ஹீரோவின் படத்தில் நடிக்க போட்டியிட்டு வருவதாக கூறப்படுகிறது. 

Two Actress In Competition To Act In NC 24 Movie : தென்னிந்திய திரையுலகை பொறுத்தவரை, திறமைமிகு நடிகர்கள் குறைந்து விட்டதாக ரசிகர்கள் கருதுகின்றனர். இப்போதுள்ள ஒரு சில நடிகர்-நடிகைகள் மட்டுமே வருங்கால சினிமாவை காப்பாற்றுவர் என்ற கருத்து எழுந்துள்ளது. அப்படி, நம்பிக்கை நட்சத்திரங்களாக இருப்பவர்கள், மீனாட்சி சௌத்ரி மற்றும் ஸ்ரீலீலா. இளம் நடிகைகளான இவர்கள், இப்போது பல பிரபல ஹீரோக்களின் படங்களில் கமிட் ஆகி, தொடர்ந்து நடித்து வருகின்றனர். இந்த நிலையில், இவர்கள் இருவரும் ஒரு ஹீரோவின் படத்தில் நடிக்க போட்டியிட்டு வருவதாக கூறப்படுகிறது. 

1 /7

தெலுங்கு திரையுலகை சேர்ந்த இளம் கதாநாயகிகள், ஸ்ரீலீலா மற்றும் மீனாட்சி சௌத்ரி. இருவரும், திரையுலகிற்கு வந்த வெகு சில காலங்களிலேயே பிரபல ஹீரோக்களின் படங்களில் கமிட் ஆகி நடிக்க ஆரம்பித்து விட்டனர். 

2 /7

தெலுங்கில் இன்னொரு பிரபல கதாநாயகனாக வலம் வரும் நாகசைதன்யா, தனது 24வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை விருபக்‌ஷா படத்தை இயக்கிய கார்த்திக் வர்மா இயக்க இருக்கிறார்.

3 /7

நாக சைத்னயாவின் இந்த 24வது படத்தில் நடிக்க முதலில் பேசப்பட்ட நாயகி, மீனாட்சிதான். ஆனால், அவர் இந்த படத்திற்காக அதிக சம்பளம் கேட்டதாகவும் இதனால் இந்த படத்தில் இருந்து கழற்றிவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

4 /7

படக்குழு, மீனாட்சியை விட்டுவிட்டு ஸ்ரீலீலாவை நடிக்க வைக்க தீர்மானித்தது. ஆனால், ஸ்ரீலீலா ஏற்கனவே அகில் அக்கினேனியின் படத்தில் கமிட் ஆகி விட்டதால் அவரால் இந்த படத்திற்கு கால்ஷீட் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டதாம்.

5 /7

ஸ்ரீலீலாவுடன் நடந்த தொடர் பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிந்த பிறகு வேறு வழியின்றி படக்குழுவினர் மீனாட்சியிடமே சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

6 /7

மீனாட்சி-ஸ்ரீலீலாவிற்குள், இந்த படத்திற்காக மட்டுமல்ல வேறு ஒரு படத்திற்காகவும் போட்டி நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

7 /7

வளர்ந்து வரும் ஹீரோ நவீன் போலிஷிட்டெயின் ஒரு படத்தில் முதலில் ஹீரோயினாக நடிக்க இருந்தவர் ஸ்ரீலீலாதான். ஆனால், சில காரணங்களினால் அவர் நீக்கப்பட்டு மீனாட்சி இதில் ஹீரோயினாக மாறியிருக்கிறார். இப்படி, தெலுங்கு திரையுலகில் இவர்கள் இருவருக்கு இடையிலும் கடும் போட்டி நிலவி வருவதாக கூறப்படுகிறது.