QR குறியீடு மோசடி.. தவிர்ப்பது எப்படி? பணம் செலுத்தும்போது கவனமாக இருங்கள்!

QR Code Payments Fraud Alert: மக்களை ஏமாற்றுவதற்கு ஏராளமான வழிகள் உள்ளன. அதில் ஒன்று QR குறியீடுகளைப் பயன்படுத்தி மோசடி செய்வது. QR குறியீடுகளை ஸ்கேன் செய்யும் போது கவனம் தேவை.

Written by - Shiva Murugesan | Last Updated : Jan 21, 2025, 08:28 AM IST
QR குறியீடு மோசடி.. தவிர்ப்பது எப்படி? பணம் செலுத்தும்போது கவனமாக இருங்கள்! title=

How To Identify Fake QR Code: இப்போதெல்லாம் மக்கள் பெரும்பாலும் அனைத்து வகையான பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள யுபிஐ (UPI) செயலியை பயன் படுத்துகிறார்கள். இந்தியாவில் சுமார் 50-க்கும் மேற்பட்ட யுபிஐ செயலிகள் புழக்கத்தில் உள்ளன. ஆனால் அதில் குறிப்பாக போன்பே (PhonePe), Google Pay (கூகுள்பே), பேடிஎம் (Paytm) போன்ற யுபிஐ செயலிகள் அதிகம் பயன் படுத்தப்படுகிறது. இந்த செயலிகள் மூலம் கடைகளில் பணம் செலுத்துவதற்கு QR குறியீட்டை ஸ்கேன் செய்வது எளிதான வழியாகும். 

QR குறியீடு ஸ்கேன் செய்து பணம் செலுத்துவது ஆபத்து?

ஏனென்றால் யுபிஐ ஐடி அல்லது வங்கி கணக்கில் இணைக்கப்பட்ட மொபைல் எண் இருந்தால் போதும். அதன்மூலம் பணம் அனுப்பலாம். அதேநேரம் QR குறியீடு மூலம் பணம் செலுத்துவதும் ஆபத்தானது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள் சமீபகாலத்தில் பல ஆன்லைன் மோசடி அரங்கேறி வருகிறது. அந்த வரிசையில், QR குறியீடு மூலம் பணம் செலுத்துவதற்கு முன்பு பெறுநரின் பெயரைச் சரிபார்த்து பணம் அனுப்பினால் மோசடியைத் தவிர்ப்பதற்கான வழி என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

QR குறியீடு மோசடி - எச்சரிக்கை

QR குறியீடு மோசடி மூலம் நடைபெறும் மோசடி அதிர்ச்சியான சம்பவம் வெளியாகி உள்ளது. மத்தியப் பிரதேசத்தின் கஜுராஹோவில், மோசடி செய்பவர்கள் இரவில் பல நிறுவனங்களுக்கு வெளியே ஒட்டப்பட்ட QR குறியீடுகளை மாற்றி, அதன்மூலம் பணத்தை மோசடி செய்துள்ளனர். இவற்றில் பெட்ரோல் பம்புகள், மருத்துவக் கடைகள் மற்றும் பிற கடைகள் அடங்கும். வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தியபோது, ​​பணம் மோசடி செய்பவரின் வங்கிக் கணக்கில் சென்றது. நாட்டின் பல நகரங்களில் இதுபோன்ற சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வருகின்றன.

என்ன முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்

QR குறியீடு மோசடி குறித்து நிதி அமைச்சகம், (இதில் அனைத்து வகையான QR குறியீடு மோசடிகளும் அடங்கும் என்பதை நினைவில் கொள்க) பல முன்னெச்சரிக்கை வழிகாட்டுதலையும் வழங்கி உள்ளது.

-- QR குறியீட்டை ஸ்கேன் செய்த பிறகு பணம் பெறுபவரின் பெயரைச் சரிபார்க்கவும்

-- குறியீடு சரியாக உள்ளதா? இல்லையா? என்பதைச் சரிபார்க்க Google Lens ஐப் பயன்படுத்தவும்

-- QR குறியீடு தெளிவாகத் தெரியவில்லை என்றால், அதை ஸ்கேன் செய்ய வேண்டாம்.

-- QR குறியீடு பணத்தை அனுப்புவதற்கு மட்டுமே ஸ்கேன் செய்யப்படுகிறது. பணத்தைப் பெறுவதற்கு அல்ல.

QR குறியீடு மோசடியைத் தவிர்க்க இதைச் செய்யுங்கள்

உங்கள் கடையைத் திறந்த பிறகு, QR குறியீட்டை ஸ்கேன் செய்து, உங்கள் பெயர் மற்றும் கணக்கு விவரங்கள் சரியாகத் தெரிகிறதா இல்லையா என்பதைச் சரிபார்க்கவும்

உங்கள் QR குறியீடு ஸ்கேன் ஸ்டிக்கரை சரியான இடத்தில் ஒட்ட வேண்டும் அல்லது QR குறியீட்டை கடையின் உள்ளே வைக்கவும். இதன்மூலம் யாரும் அதை வெளியில் இருந்து மாற்ற முடியாது

எத்தனை மோசடி? எவ்வளவு பணம்?

எந்தெந்த ஆண்டு எத்தனை மோசடி சம்பவங்கள் மற்றும் எவ்வளவு பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது என்பது குறித்தும் அறிந்துக்கொள்ளுங்கள். 

2021-22 ஆம் ஆண்டி 14,625 மோசடி சம்பவங்களும், 19.35 கோடி பணம் மோசடி செய்யப்பட்டு உள்ளது.

2022-23 ஆம் ஆண்டி 30,340 மோசடி சம்பவங்களும், 41.73 கோடி பணம் மோசடி செய்யப்பட்டு உள்ளது.

2023-24 ஆம் ஆண்டி 39,638 மோசடி சம்பவங்களும், 56.34 கோடி பணம் மோசடி செய்யப்பட்டு உள்ளது.

இதுவரை 2024-25 ஆம் ஆண்டி 18,167 மோசடி சம்பவங்களும், 22.22 கோடி பணம் மோசடி செய்யப்பட்டு உள்ளது.

ஆன்லைன் மோசடி நடந்தால் எப்படி புகார் அளிப்பது?

மோசடியைத் தடுக்க அரசாங்கம், ரிசர்வ் வங்கி மற்றும் இந்திய தேசிய கட்டணக் கழகம் (NPCI) பல முயற்சிகளை எடுத்து வருகின்றன. இதுபோன்ற மோசடி சம்பவங்கள் குறித்து www.cybercrime.gov.in என்ற இணைத்தளம் மூலமும் மற்றும் ஹெல்ப்லைன் எண் 1930 மூலமும் புகார் அளிக்கலாம்.

மேலும் படிக்க - UPI வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்.. இனி இந்த சிரமம் இல்லை யுபிஐ உச்சவரம்பில் மாற்றம்!

மேலும் படிக்க - IRCTC மட்டுமல்ல... இந்த செயலிகள் மூலமும் டிக்கெட் புக் செய்யலாம்... சலுகைகளும் உண்டு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News