Latest News Comedy Actor Ganja Karuppu : கலைஞர் மற்றும் ஸ்டாலின் கைகளால் கிடைத்த கலைமாமணி விருதை காணவில்லை எனவும் அது திருடப்பட்டிருப்பதாகவும் வாடகை வீட்டின் உரிமையாளர் மீது நடிகர் கஞ்சா கருப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த நடிகர் கஞ்சா கருப்பு சென்னை மதுரவாயல் கிருஷ்ணா நகர் பகுதியில் கடந்த 2021 ஆம் ஆண்டு ரூபாய் 20 ஆயிரத்துக்கு ரமேஷ் என்பவரின் வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார். சென்னையில் சினிமா சூட்டிங் நடக்கும் போதெல்லாம் வந்து வாடகை வீட்டில் தங்குவார். இந்த நிலையில் கஞ்சா கருப்பு மீது வீட்டின் உரிமையாளர் ரமேஷ் மதுரவாயல் காவல் நிலையத்தில் ஆன்லைன் வாயிலாக புகார் ஒன்றை கொடுத்தார். அந்த புகாரில் கஞ்சா கருப்பு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் நேற்று முன் வைத்தார்.
இந்த நிலையில் இன்று தனது வீட்டில் இருந்த பொருட்களை உரிமையாளர் மற்றும் அவரது நண்பர்கள் திருடியுள்ளதாக நடிகர் கஞ்சா கருப்பு பரபரப்பு பேட்டி அளித்தார். தான் வசிக்கும் வாடகை வீட்டின் கதவை போலீசார் மற்றும் செய்தியாளர்கள் முன்பு நடிகர் கஞ்சா கருப்பு திறந்து ஆய்வு செய்தார். அப்போது கலைஞர் மற்றும் ஸ்டாலின் கைகளால் வாங்கிய கலை மாமணி விருதை காணவில்லை என அவர் குற்றச்சாட்டினை வீட்டில் உரிமையாளர் மீது வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "கொலை மிரட்டல் ஆடியோ சித்தரிக்கப்பட்டுள்ளது. பணம் கொடுக்கவில்லை என உரிமையாளர் பொய் கூறுகிறார். ஆனால் ரூபாய் 40,000 பணம் கடந்த மாதம் கொடுத்தேன் ஆதாரம் உள்ளது. சாவி என்னிடம் இருக்கும் போது அத்துமீறி கதவை உடைத்து உரிமையாளர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கிறார். கலைஞர், ஸ்டாலின் கைகளில் கொடுத்த கலைமாமணி விருதை காணவில்லை. ரேஷன் கார்டு ஆதார் கார்டு பேங்க் புக் அனைத்தையும் திருடி சென்றிருக்கின்றனர். நான் வாடகை பணம் கொடுத்து விட்டேன். ஆனாலும் அத்துமீறி எனது வீட்டை உடைத்து அறைக்குள் புகுந்து உடைத்து உரிமையாளர் அடாவடி செய்துள்ளார்.
பணம் கொடுக்கவில்லை என உரிமையாளர் பொய் கூறுகிறார். கடந்த மாதம் கூட 40 ஆயிரம் அவருக்கு அனுப்பி உள்ளேன் ஆதாரம் உள்ளது.
வாடகை வீட்டில் இருந்தால் எந்த உரிமையாளர் கதவை உடைத்து திருட்டுத்தனம் செய்வார்களா? நான் குடும்பத்துடன் வசித்து வந்திருக்கிறேன் நான் ஒன்னும் விபச்சாரம் செய்யவில்லை. எனது பொருளை காணவில்லை எனக்கு தான் வலிக்கிறது. நான் தான் கத்துகிறேன். சாவி என்னிடம் உள்ளது அத்துமீறி உடைத்து உரிமையாளர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கிறார். கொலை மிரட்டல் ஆடியோ சித்தரிக்கபட்டுள்ளது. என்னைப் போன்று யாரையோ ஒரு ஆளை வைத்து பேசி எடுக்கப்பட்டிருக்கிறது" என பரபரப்பு பேட்டி கொடுத்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ