இன்றைய ராசிபலன்: ‘இந்த’ 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அடிக்கும் நாள்! யாருக்கு தெரியுமா?

Horoscope Predictions Today 24th January 2025 : 12 ராசிகளில், சில ராசிகளுக்கு இன்று எதிர்பாராத திருப்பம் ஏற்படும் நாளாக இருக்கிறது. உங்கள் ராசிக்கான பலன் குறித்து இங்கு பார்ப்போம்.

Written by - Yuvashree | Last Updated : Jan 24, 2025, 06:59 AM IST
  • 24 ஜனவரி, 2025-இன்றைய ராசிபலன்
  • உங்கள் ராசிக்கான பலன் என்ன?
  • 3 ராசிகளுக்கு திடீர் திருப்பம் வருமாம்!
இன்றைய ராசிபலன்: ‘இந்த’ 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அடிக்கும் நாள்! யாருக்கு தெரியுமா? title=

Horoscope Predictions Today 24th January 2025 : அனைத்து ராசிகளுக்கும் அவரவர்களின் கிரகப்பலன்களுக்கு ஏற்றபடி பலன்கள் அமையும். அப்படி, 12 ராசிகளில் ஒரு சில ராசிகளுக்கு இன்று திடீர் திருப்பம் ஏற்படும் நாளாகவும், சில ராசிகளுக்கு திடீர் அதிர்ஷ்டம் கொட்டும் நாளாகவும் இருக்கிறது. உங்கள் நாள் எப்படி இருக்கப்போகிறது என்பதை இங்கு தெரிந்துகொள்ளலாம்.

மேஷம்

மனதில் இனம் புரியாத சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். செய்யும் முயற்சிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். பெரியோர்களிடம் அனுசரித்துச் செல்லவும். நெருக்கமானவர்களிடத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். கடன் விஷயங்களில் பொறுமை வேண்டும். திடீர் முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். அமைதி வேண்டிய நாள்.

அஸ்வினி : குழப்பமான நாள்.

பரணி : அனுசரித்துச் செல்லவும்.

கிருத்திகை : பொறுமை வேண்டும்.

ரிஷபம்

செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். வழக்கு தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். புதுமையான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். குழந்தைகள் வழியில் சுப காரியங்கள் கைகூடும். அரசு தொடர்பான பணிகள் சாதகமாகும். பக்தி நிறைந்த நாள்.

கிருத்திகை : தடைகள் விலகும். 

ரோகிணி : முடிவுகள் கிடைக்கும்.

மிருகசீரிஷம் : பணிகள் சாதகமாகும்.

மிதுனம்

வியாபாரப் பணிகளில் திடீர் லாபங்கள் உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகளை கட்டுப்பாட்டுக்குள் வரும். சொத்து பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். அணுகு முறையில் சில மாற்றங்கள் உண்டாகும். வழக்குகளில் திருப்பங்கள் ஏற்படும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பாராட்டு கிடைக்கும் நாள்.

மிருகசீரிஷம் : லாபங்கள் உண்டாகும்.

திருவாதிரை : தீர்வுகள் கிடைக்கும்.

புனர்பூசம் : உதவிகள் கிடைக்கும்.

கடகம்

வெளிவட்டத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். மறைமுகமான எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். பழைய நண்பர்களின் சந்திப்புகள் ஏற்படும். கடன்களை அடைப்பதற்கான ஆலோசனைகள் கிடைக்கும். வியாபாரத்தில் மாற்றமான அணுகுமுறையால் லாபம் மேம்படும். உயர் அதிகாரிகளிடத்தில் நெருக்கம் உண்டாகும். கவனம் வேண்டிய நாள்.

புனர்பூசம் : மதிப்புகள் அதிகரிக்கும்.

பூசம் : சந்திப்புகள் ஏற்படும்.

ஆயில்யம் : நெருக்கம் உண்டாகும்.

சிம்மம்

மாணவர்களுக்கு மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். கல்விப் பணிகளில் சில மாற்றங்கள் காணப்படும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். கால்நடை பணிகளில் லாபங்கள் அதிகரிக்கும். வாகனப் பயணம் மூலம் ஆதாயம் அடைவீர்கள். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். வியாபார ரீதியான பணிகளில் செல்வாக்கு அதிகரிக்கும். தனம் நிறைந்த நாள்.

மகம் : பிரச்சனைகள் குறையும்.

பூரம் : ஒத்துழைப்பு மேம்படும்.

உத்திரம் : செல்வாக்கு அதிகரிக்கும்.

கன்னி

தன்னம்பிக்கையுடன் சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வியாபார போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். உயர் அதிகாரிகளிடம் இருந்துவந்த வேறுபாடுகள் மறையும். திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். சிறு தூர பயணங்களால் மனதளவில் மாற்றம் உண்டாகும். அக்கம், பக்கம் இருப்பவர்களால் அனுகூலம் பிறக்கும். லாபம் கிடைக்கும் நாள்.

உத்திரம் : ஒத்துழைப்பான நாள்.

அஸ்தம் : வேறுபாடுகள் மறையும்.

சித்திரை : அனுகூலம் பிறக்கும்.

துலாம்

மனதளவில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். எதிர்பார்த்த தனம் சார்ந்த உதவிகள் கைகூடிவரும். பொன், பொருட் சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். நண்பர்கள் வழியில் இருந்துவந்த வேறுபாடுகள் விலகும். உயர் அதிகாரிகள் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். சோர்வு விலகும் நாள்.

சித்திரை : குழப்பங்கள் நீங்கும்.

சுவாதி : வேறுபாடுகள் விலகும்.

விசாகம் : செல்வாக்கு அதிகரிக்கும்.

விருச்சிகம்

வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நண்பர்களின் வருகையால் மாற்றம் ஏற்படும். மனதிற்கு நெருக்கமானவர்களின் சந்திப்புகள் உண்டாகும். ஆடம்பரத்தை குறைத்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். பிரதிவாதங்களில் சமநிலை அறிந்து செயல்படவும். வியாபாரத்தில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்களால் எண்ணியவை நிறைவேறும். வரவு மேம்படும் நாள்.

விசாகம் : மாற்றமான நாள்.

அனுஷம் : சேமிப்பு மேம்படும்

கேட்டை : வாய்ப்புகள் கிடைக்கும்.

தனுசு

மனதில் எண்ணிய காரியம் நிறைவேறும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். திடீர் சந்திப்புகள் மூலம் அனுகூலம் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு ஏற்படும். உத்தியோக பணிகளில் முக்கியத்துவம் மேம்படும். லாபம் மூலம் கையிருப்புகள் அதிகரிக்கும். ஆதாயம் நிறைந்த நாள்.

மூலம் : செல்வாக்கு அதிகரிக்கும்.

பூராடம் : அனுகூலமான நாள்.

உத்திராடம் : கையிருப்புகள் அதிகரிக்கும்.

மகரம்

பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். பணி நிமித்தமான புதிய முயற்சிகள் பலிதமாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பெருந்தன்மையான செயல்கள் மூலம் மதிப்புகள் அதிகரிக்கும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். இரக்கம் வேண்டிய நாள்.

உத்திராடம் : ஆசிகள் கிடைக்கும். 

திருவோணம் : ஆதரவான நாள்.

அவிட்டம் : முன்னேற்றமான நாள்.

கும்பம்

உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் உருவாகும். மற்றவர்கள் மீதான கருத்துக்களை குறைத்துக் கொள்ளவும். குடும்ப விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். குணநலன்களில் மாற்றங்கள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே மனஸ்தாபங்கள் ஏற்பட்டு நீங்கும். பணிச் சுமையினால் கோபங்கள் அதிகரிக்கும். ஜாமீன் விஷயங்களில் கவனம் வேண்டும். நன்மை மேம்படும் நாள்.

அவிட்டம் : புதுமையான நாள்.

சதயம் : மாற்றங்கள் பிறக்கும்.

பூரட்டாதி : கவனம் வேண்டும். 

மீனம்

எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். கணவன், மனைவி இடைய ஒற்றுமை அதிகரிக்கும். நண்பர்களுடன் சிறுதூர பயணங்கள் சென்று வருவீர்கள். தேவையற்ற வாதங்களை தவிர்ப்பது நல்லது. எண்ணங்களை செயல் வடிவில் மாற்றுவீர்கள். சிந்தனைப் போக்கில் மாற்றம் உண்டாகும். சமூகப் பணிகளில் செல்வாக்கு உயரும். கலை சார்ந்த துறைகளில் மதிப்புகள் மேம்படும். செல்வாக்கு மேம்படும் நாள்.

பூரட்டாதி : சுறுசுறுப்பான நாள்.

உத்திரட்டாதி : வாதங்களை தவிர்க்கவும்.

ரேவதி : மதிப்புகள் மேம்படும்.

மேலும் படிக்க | சொந்த ராசிக்கு செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிகளுக்கு பண மழை காத்திருக்கிறது!

மேலும் படிக்க | சுக்கிரன் இடப்பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்கள் வாழ்க்கை ஜோரோ ஜோர்...அதிர்ஷ்டத்தில் ஒரு டிவிஸ்ட்!

பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான கருத்துக்கள் மற்றும் கணிப்புகளின் அடிப்படையில் எழுதப்பட்டதாகும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News