மதுரை மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டி உள்ளிட்ட 48 கிராமங்களில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஏலம் விடப்பட்டது. இதையடுத்து கிராம மக்கள் அனைவரும் போராட்ட களத்தில் குதித்தனர். மதுரை நோக்கி கூட்ட கூட்டமாக சுமார் 2000க்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்றனர்.
கடும் எதிர்ப்பு வழுத்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல் தமிழக எம்-க்களும் மத்திய அரசிடம் தொடர்ந்து வலுயுறுத்தினர். இந்த அழுத்தம் காரணமாக மத்திய அரசும் டங்ஸ்டன் திட்டத்தை மறு ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது.
இந்த சூழலில் அரிட்டாபட்டி மற்றும் சுற்றியுள்ள 48 கிரமங்களையும் தொல்லியம் மற்றும் வேளாண் பாதுகாப்பு மண்டலமாக தமிழக அரசு அறிவிக்கும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்து விவசாயிகள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் டங்ஸ்டன் சுரங்கம் எதிர்ப்பு போராட்டக்குழு நிர்வாகிகள் இன்று (ஜன.22) மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்திக்க உள்ளனர். அவர்களுடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் டெல்லிக்கு சென்றுள்ளனர்.
மேலும் படிங்க: ஜடேஜாவிற்காக சண்டைக்கு நின்ற அஸ்வின்! சிஎஸ்கே ரத்தம்னா சும்மாவா?
மகிழ்ச்சிகரமான செய்தி வரும்
முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை அரிட்டாபட்டி கிராம மக்கள் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டங்ஸ்டன் விவகாரத்தில் மகிழ்ச்சிகரமான அறிவிப்பு வரும். இது பிரச்சனை என தெரிந்த பிறகு மத்திய அரசு அதற்கான தீர்வை வழங்கவே முயற்சித்து வருகிறது எனத் தெரிவித்துள்ளார்.
கருத்து கூற விரும்பவில்லை
தொடர்ந்து பேசிய அவர், கோமியம் குறித்து வகுப்பறையில் ஐஐடி இயக்குநர் காமகோடி பேசவில்லை. எனவே அது குறித்து விவாதிக்க வேண்டாம். அதேபோல் தமிழிசை செளந்திரராஜன் அவர்களது கருத்துக்கும் நான் பதில் தெரிவிக்க விரும்பவில்லை. அது ஒவ்வொருவரின் தனிப்பட்ட கருத்து என பேசினார்.
மேலும் படிங்க: பரந்தூர் ஏர்போர்ட்.. மக்கள் பாதிக்காத வகையில் அமைக்கப்படும்.. தமிழக அரசு விளக்கம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ