பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர், இலங்கை தமிழர்களுக்கான ஒரு கூட்டமும் ஓவர்சீஸ் பிரெண்ட்ஸ் ஆப் பி பி .ஜே .பி ஆதரவாளர்களுக்கான பிரிட்டன் அமைப்பின் ஒரு கூட்டத்தின் கலந்து கொண்டு வந்து இருக்கின்றேன். எனக்கு வரவேற்பு கொடுத்த அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். திருவள்ளுவரையும், வள்ளலாரையும் வேறு யாரோ களவாட முயற்சி செய்து இருக்கிறார்கள் என மாநிலத்தின் முதலமைச்சர் தெரிவித்து இருக்கிறார். திருவள்ளுவர் திருக்குறளில் ஹிந்து ஞான மரபினுடைய கருத்துக்களை தான் தெரிவித்து இருக்கிறார். கடவுள் வாழ்த்து என்ற தனியான ஒரு அதிகாரம் திருக்குறளில் பல்வேறு இடங்களில் ஹிந்து மத கருத்துக்களை அவர் வெளிப்படுத்தி இருப்பது அனைவரும் அறிந்தது.
மேலும் படிக்க | தவெக தலைவர் விஜய் சொன்னது உண்மைதான் - நடிகை கௌதமி அதிரடி!
அதே போல வள்ளலார் இந்து சமய ஞானத்தின் ஒரு கூறாக அவர் விளங்கியவர். ஆனால் திராவிட மாடல அரசு திட்டமிட்டு இந்த இரண்டு பேரும் தமிழ் அடையாளங்களை அவர்கள் இந்துக்கள் அல்லாதவர்கள் போல, அவர்களுடைய உருவத்திலே மத அடையாளங்களை தவிர்த்து விட்டு வரைவது அவர்கள் இந்து மதத்திற்கு எந்த சம்பந்தமும் இல்லை என பேசுவது என எது இந்த நாட்டின் அடையாளமோ? எது ஹிந்து ஞான மரபின் உடைய சுதந்திரமாக சிந்தித்து செயல்படக் கூடிய தன்மையோ ? அவற்றை எல்லாம் மனிதனுக்கு தனியாக ஒரு தமிழ் அடையாளத்திற்கு உள்ளாக திராவிட அடையாளத்திற்கு உள்ளாக நுழைய வைத்து தங்களுடைய சுய லாப அரசியலுக்காக இதை பயன்படுத்துகிறார்கள்.
திருவள்ளுவரும் வரலாறும் இந்த நாட்டில் இருக்கின்ற தனித்துவமான கலாச்சார பண்பாடு மற்றும் அவர்களுடைய சிந்தனை ஹிந்து மத சிந்தனைகளுக்காக உலகம் முழுக்க அறியக் கூடியவர்கள் முதல்வரின் இந்த கருத்து திருவள்ளுவர் தினத்திற்காக அல்லது திருவள்ளுவர் திருக்குறளை பற்றி உலக அரங்குகளிலேயும் இந்திய நாட்டில் எங்கு சென்றாலும் பிரதமர் நரேந்திர மோடி பேசுவதை பொறுத்துக் கொள்ளாமல் ஒருவித பதட்டத்திற்கு உள்ளாகி மாநிலத்தின் முதலமைச்சர் இது மாதிரியான கருத்துக்களை தெரிவித்துக் கொண்டு இருக்கிறார்.
ஏனென்றால் சமத்துவ பொங்கல் யார் வேண்டுமானாலும், கொண்டாடலாம் அது தவறில்லை ஆனால் உங்களுக்கான அடையாளம் என்பது என்ன? இன்று ஜல்லிக்கட்டு விழாவின் போது கூட கோவில்களில் இருந்து தான் காலையில் அவிழ்த்து விடப்படுகிறது. கோவில் பூஜை செய்த பிறகு தான் ஜல்லிக்கட்டு ஆரம்பிக்கிறது. ஆக கோயில் என்பதும் இந்து மத பண்டிகைக்கான அடையாளங்கள் என்பதும் பொங்கலோடு, பொங்கல் பண்டிகையோடு இரண்டறக் கலந்தது தி.மு.க அரசு இந்து மதத்தின் மீது இருக்கக் கூடிய வெறுப்பின் காரணமாக இந்த அடையாளங்களை மறைத்து வேறு ஏதோ விதத்தில் சமத்துவ பொங்கல் என மக்கள் முன்பாக அவர்கள் வேறொரு உருவத்தை வரைய நினைக்கிறார்கள்.
அதை ஒருபோதும் மக்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை, நம் நாட்டில் கல்வித் துறை என்று எடுத்துக் கொண்டால் கல்வித் துறை என்பது மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் பொதுவான ஒன்று குறிப்பாக உயர் கல்வித் துறை என்பது. அதிகமாக மத்திய அரசின் நிதி உதவி நாள் நடத்தப்படக் கூடியது அது இந்த கல்வி நிறுவனங்களை உருவாக்குகின்ற பொழுது சட்ட, திட்டத்தின் போது அதில் தேவைப்படக் கூடிய ஒரு பாதுகாப்பு அம்சங்களை வைத்து இருக்கிறார்கள் இதற்கு முன்பாக துணைவேந்தர் நியமனம் என்பது எப்படி ? எல்லாம் பணம் பெற்றுக் கொண்டு அல்லது அதில் பல்வேறு விதமான முறைகேடுகள் நடந்து இருக்கிறது. என்பது விதமான பல்வேறு வழக்குகளை உள்ளது.
விஜய் அவர்களுக்கு மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் நேற்றே பதில் கூறி இருந்தால் விமான நிலையத்திற்கு சென்னையில் இடம் எங்கே இருக்கிறது. இன்றைக்கு எந்த ஒரு புதிதான வேலை வாய்ப்பை உருவாக்கினாலும், கட்டமைப்பு வசதிகளுக்காக நிலம் தேவைப்படுகிறது, இன்றைக்கு நமக்கு வளர்ச்சி என்கின்ற போது இந்த நிலம் இல்லாமல் வளர்ச்சி என்பது இல்லை. அதே சமயம் விவசாயிகளின் நலனை பாதிக்கின்ற வளர்ச்சி என்பதை நாங்கள் எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் ஏதாவது ஒரு இடத்தில் விமான நிலையம் தேவைப்படுகிறது. கோவையை எடுத்துக் கொள்ளுங்கள், கோவை விமான நிலையத்தில் விரிவாக்கத்திற்கு எத்தனை ஆண்டுகளாக போராடிக் கொண்டு இருக்கின்றோம். இன்றைக்கு கேரளாவில் இருக்கக் கூடிய கொச்சின் விமான நிலையத்திற்கு அங்கு செல்லக் கூடிய அளவிற்கு வந்து ஆகிவிட்டது.
ஒரு பக்கம் என்ன நினைக்கிறோம் என்றால் விமான நிலையம் வந்தால், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு புதிதாக தொழில் நிறுவனங்கள் இதை பேலன்ஸ் செய்து தான் நாம் எப்போதுமே, முடிவெடுக்க வேண்டும். ஆனால் விஜய் அவர்கள் ஏதாவது ஒரு புதிதான விஷயத்தை மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்த முடியுமா ? என்று நினைக்கிறாரா ? என்று தெரியவில்லை. ஆனால் வளர்ச்சி என்கின்ற போது கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். அதற்கு அவரிடம் அவர் கட்சியிடம் என்ன தீர்வு என்பதை ஊடகத்தைச் சேர்ந்தவர்கள் நீங்கள் கேட்டு சொல்லுங்கள் என்றார். கட்சி வேறுபாடு இன்றி எந்த மக்கள் பாதிக்கப்பட்டு இருந்தாலும், அந்த மக்களின் குரலாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசுவேன் என்றார்.
மேலும் படிக்க | மகளிர் உரிமைத்தொகையில் வருகிறது மாற்றம்? இனி ரூ.1000 இல்லை?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ