பெரியாரால் தமிழ், தமிழர்களுக்கு நடந்த நன்மை என்ன? - சீமான் கேள்வி

நீங்களாம் பெரிய எடிட்டரா என பிரபாகரனுடன் எடுத்த புகைப்படம் தொடர்பாகவும் அடிப்படையிலேயே பெரியார் பிழையானவர் எனவும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கோபமாக பேசியுள்ளார். 

Written by - R Balaji | Last Updated : Jan 22, 2025, 12:20 PM IST
  • 15 வருடத்திற்கு முன்பு பிரபாகரனுடன் இருக்கும் வெளியானபோது எங்கு சென்றீர்கள்
  • பெரியார் அடிப்படையிலேயே பிழையானவர்
  • பத்திரிக்கையாளர் சந்திப்பில் கொந்தளித்த சீமான்
பெரியாரால் தமிழ், தமிழர்களுக்கு நடந்த நன்மை என்ன? - சீமான் கேள்வி title=

பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி சீமான் பேசியது சர்ச்சைக்குள்ளானது. இதனிடையே சீமான் பிரபாகரனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் எடிட் செய்யப்பட்டது. அவர் பிரபாகரனுடன் புகைப்படம் எடுக்க வில்லை என சினிமா இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் கூறினார். இது அடுத்த சர்ச்சையை கிளப்பி உள்ளது. 

இந்த நிலையில், இன்று (ஜன.22) செய்தியாளர்களை சந்தித்து சீமான் பேசினார். அப்போது, எத்தனை பேர் அதை எடிட் செய்தீர்கள். நீங்களாம் பெரிய எடிட்டரா? காமெடி செய்து கொண்டிருக்கிறீர்கள். 

15 வருடமாக எங்கே போனீர்கள்

15 வருடத்திற்கு முன்பு அந்த புகைப்படம் வெளியாகும் போதே செல்ல வேண்டியது தானே. பெரியார் குறித்து விமர்சினம் வைத்த பின், தற்போது பிரபாகரனுடன் எடுத்த புகைப்படம் பொய் என்று வருகிறார்கள். பெரியாரா பிரபாக்ரனா மோதி பார்ப்போம் என்று ஆகிவிட்டது. 

பெரியார் குறித்து விமர்சித்ததற்கு திமுகாவே அமைதியாகதான் இருக்கிறது. மற்ற கட்சிகரர்கள் தான் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். கீ வீரமணியை பதில் செல்ல செல்லுங்கள். 

மேலும் படிங்க: IND vs ENG: வாஷிங்டன் சுந்தர் இல்லை! இவருக்கு தான் வாய்ப்பு! இந்தியாவின் பிளேயிங் 11!

கெளத்தூர் மணி என்பவர் நான் மதிக்கும் பெரிய மனிதர். ஆனால் நான் நாம் தமிழர் கட்சிப் பெய்ரை சோ.ராமசாமியையும், குருமுர்த்தியையும் அழைத்து சென்று ஆதித்தனார் காலில் விழுந்தேன் என்றார்கள். 

பொய்யை தவிர வேறு ஏதும் இருக்கிறதா? நாம் தமிழர் கட்சி ஒவ்வொரு தமிழர்களுக்கு உரிமை உடையது. சோ.ராமசாமிக்கும் குருமூர்த்திக்கும் நாம் தமிழர் கட்சிக்கு என்ன சம்பந்தம் உள்ளது. 

பெரியாரால் தமிழ், தமிழர்களுக்கு நடந்த நன்மை என்ன

பெரியார் அடிப்படையிலேயே பிழையானவர். தமிழ் முட்டாள்களின் மொழி, சனியன், தமிழில் என்ன இருக்கிறது என கூறியவர் பெரியார். என் நிலத்தில் நீங்கள் யார். நீங்கள் கன்னடம், கர்நாடக நாட்டில் பிறந்தவர். என் நிலத்தில் அமர்ந்து தமிழை அசிங்கப்படுத்துவதா.

பெரியாரால் தமிழர்களுக்கோ அல்லது தமிழிக்கோ என்ன நன்மை நடந்திருக்கிறது சொல்லுங்கள். நீதிமன்றத்தில் வழக்கு வந்தால், அங்கு பதிலளிப்பேன் எனத் தெரிவித்தார். 

மேலும் படிங்க: "குட் நியூஸ் வரும்".. டங்ஸ்டன் விவகாரத்தில் அண்ணாமலை தகவல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News