Vitamin B 12 Deficiency: நமது உடலின் சீரான செயல்பாட்டிற்கு அனைத்து விதமான ஊட்டச்சத்துகளும் அவசியம். வைட்டமின்கள், நார்ச்சத்து, புரதச்சத்து, இரும்புச்சத்து என இவை அனைத்தும் சேர்ந்து உடலை ஆரோக்கியமாக வைக்கின்றன. இவற்றில் உடல் ஆரோக்கியத்தை காப்பதில் வைட்டமின்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. பல்வேறு வகையான வைட்டமின்களுக்கு பிரத்யேக பயன்பாடுகள் உள்ளன.
நம் உடலுக்கு இன்றியமையாத வைட்டமின்களில் வைட்டமின் பி-12 மிக முக்கியமானதாகும். இந்த வைட்டமின்னின் குறைபாடு ஏற்பட்டால், அது பல வித பிரச்சனைகளை ஏற்படுத்தும். வைட்டமின் பி 12 உடலில் இரத்த சிவப்பணுக்களை உருவாக்குகிறது, ஹீமோகுளோபினை அதிகரிக்கிறது மற்றும் பல அத்தியாவசிய கூறுகளின் குறைபாட்டை பூர்த்தி செய்ய உதவுகிறது. வைட்டமின் பி12 என்பது நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் அவசியமான ஒரு தனிமமாக கருதப்படுகின்றது.
வைட்டமின் பி12 குறைபாடு
வைட்டமின் பி-12 குறைபாடு நரம்பு மண்டலத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகின்றது. இந்த வைட்டமின் குறைபாடு சிலருக்கு மன அழுத்தத்தையும் ஏற்படுத்தலாம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். வைட்டமின் பி-12 குறைபாட்டால் ஏற்படும் பாதிப்புகள் என்ன? இதற்கான அறிகுறிகள் என்ன? இதன் குறைபாட்டை எப்படி சரி செய்வது? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
உடலில் வைட்டமின் பி12 குறைபாடு ஏற்பட்டால், நம் உடல் அதற்கான சில அறிகுறைகளை காட்டுகிறது. இந்த அறிக்குறிகள் குறித்த முழுமையான புரிதல் இருக்கவேண்டியது மிக அவசியமாகும்.
Symptoms of Vitamin B12 Deficiency: வைட்டமின் பி12 குறைபாடு இருந்தால் தென்படும் அறிகுறிகள்:
- கை, கால்களில் கூச்ச உணர்வு
- உள்ளங்கால்களும் கைகளும் சிவத்தல்
- தசைகளில் வலி மற்றும் விறைப்பு
- எப்போதும் சோர்வான உணர்வு
- மனச்சோர்வு
- பதட்டமான உணர்வு
- மனநிலை மாற்றம்
மனச்சோர்வு ஒரு தீவிர அறிகுறியாக கருதப்படுகின்றது
உடலில் வைட்டமின் பி-12 குறைபாடு காரணமாக, நீங்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்படலாம். மன அழுத்தம் பிரச்சனை பெண்களிடம் தான் அதிகமாக காணப்படுகிறது. ஆண்கள் மற்றும் பெண்களின் வாழ்க்கை முறை வேறுபட்டது. வைட்டமின் பி 12 குறைபாடு அவர்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது. பெண்களில் வாயு-அமிலத்தன்மை பிரச்சனையும் வைட்டமின் பி-12 குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம்.
வைட்டமின் பி-12 அளவை எவ்வாறு அதிகரிப்பது?
- வைட்டமின் குறைபாட்டை பூர்த்தி செய்ய இயற்கையான வழிகளைப் பின்பற்றலாம்.
- எனினும், கடுமையான வைட்டமின் குறைபாடு ஏற்பட்டால் மருத்துவரை அணுகுவது அவசியம்.
- இயற்கையாகவே வைட்டமின் பி-12 அளவை அதிகரிக்க, உணவில் பால் பொருட்களைச் சேர்க்க வேண்டும்.
- முட்டை, இறைச்சி, மீன் ஆகியவற்றை சாப்பிடலாம்.
- சோயா பால், ஓட்ஸ் மற்றும் ராகி, தினை போன்ற முழு தானியங்களையும் உட்கொள்ளலாம்.
- ஆப்பிள், வாழைப்பழம், கிவி போன்ற பழங்களும் வைட்டமின் பி-12 குறைப்பாட்டை போக்க உதவும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | பேக்கிங் சோடாவைப் பற்றி நீங்கள் இதுவரை அறிந்திராத தகவல்கள்...!
மேலும் படிக்க | உடல் எடையை வேகமாக குறைக்க சூப்பரான டிப்ஸ்: ட்ரை பண்ணி பாருங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ