மது பிரியர்களுக்கு அதிர்ச்சி! நான்கு நாட்களுக்கு மதுபான கடை விடுமுறை!

Delhi News In Tamil: மதுபானக் கடைகள் மற்றும் மது விற்கும் பல இடங்களுக்கு முக்கிய உத்தரவு. இந்த நாட்களில் மது விற்பனை செய்யக்கூடாது என அரசு அறிவிப்பு.

Written by - Shiva Murugesan | Last Updated : Jan 23, 2025, 11:48 AM IST
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி! நான்கு நாட்களுக்கு மதுபான கடை விடுமுறை! title=

Delhi Dry Days List: 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டமன்றத் தேர்தலை அடுத்து, கலால் விதிக்கு உட்பட்டு, மதுபானக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. எத்தனை நாட்கள் மதுபானக் கடைகள் மூடப்படும்? மீண்டும் எப்பொழுது திறக்கப்படும்? போன்ற விவரங்களை பார்ப்போம். 

மதுபானக் கடைகள் மூட உத்தரவு

2025 ஆம் ஆண்டு டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, டெல்லி அரசு ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது. பிப்ரவரி 3 முதல் 5 வரை, வாக்குப்பதிவு நாட்களுடன் இணைந்து, பிப்ரவரி 8 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் வரை நகரில் மதுபானக் கடைகள் மற்றும் மதுபானம் விற்கும் அனைத்து இடங்களை மூட அரசாங்கம் உத்தரவிட்டு உள்ளது.

டெல்லி கலால் ஆணையம்

டெல்லி கலால் ஆணையரின் சமீபத்திய அறிவிப்பின்படி, "70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டமன்றத்திற்கான வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணும் நாட்கள், கலால் விதிகள்-2010 இன் கீழ் " விடுமுறை நாட்கள்" என்று அறிவிக்கப்பட்டு உள்ளன" எனக் கூறியுள்ளார்.

மதுபான கடைக்கு எத்தனை நாட்கள் விடுமுறை

பிப்ரவரி 3 ஆம் தேதி மாலை 6 மணி முதல் பிப்ரவரி 5 ஆம் தேதி மாலை 6 மணி வரை, வாக்குப்பதிவு முடிவடையும் வரை 48 மணி நேரங்களுக்கு "மதுபான கடை விடுமுறை" விதி அமலில் இருக்கும். அதேபோல பிப்ரவரி 8 ஆம் தேதி வாக்கு எண்ணும் நாளாக இருப்பதால், மதுபான கடைகள், ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் கிளப்புகளில் மது விற்பனை தடைசெய்யப்படும் என அறிவிக்ப்கபட்டு உள்ளது.

கடைகள், ஹோட்டல்கள், கிளப்புகளுக்கு எச்சரிக்கை

"மதுபான கடை விடுமுறை"  நாட்களில், அனைத்து மதுபானக் கடைகள், ஹோட்டல்கள், உணவகங்கள், கிளப்புகள் மற்றும் மதுபானங்களை விற்கும் அல்லது பரிமாறும் எந்தவொரு நிறுவனங்களும் அனுமதி இல்லை என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 

"தேர்தல் விடுமுறை" நாட்களில் மதுபானம் கூடாது

அதாவது கிளப்புகள், நட்சத்திர ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் பிற நிறுவனங்கள் மதுபானங்களை வைத்திருப்பதற்கும் விநியோகிப்பதற்கும் பல்வேறு வகையான அனுமதிகள் வழங்கப்பட்டிருந்தாலும் கூட, "தேர்தல் விடுமுறை" நாட்களில் மதுபானங்களை வழங்க அனுமதிக்கப்படக்கூடாது என்றும் அறிவுறுத்தல்.

டெல்லி சட்டமன்றத் தேர்தல் விவரம்

70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கு டெல்லி தயாராகி வருகிறது, இது பிப்ரவரி 5 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்று பிப்ரவரி 8 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

டெல்லியை சுற்றி பலத்த பாதுகாப்பு.. எல்லைகளுக்கு சீல்

டெல்லி சட்டமன்றத் தேர்தல் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு, தேசிய தலைநகரின் 150 எல்லைகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளன. இந்த எல்லைகளில் 162 இடங்களில் டெல்லி காவல்துறை முற்றுகைகளை அமைத்துள்ளது. ஏதாவது ஆசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க துணை ராணுவப் படையினரும், உள்ளூர் போலீசாரும் 24 மணி நேரமும் ரோந்து பணியில் நிறுத்தப்பட்டு உள்ளனர். 

டெல்லி நகரத்திற்குள் நுழையும் ஒவ்வொரு வாகனமும் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது என்றும், சந்தேகத்திற்கிடமான நபர்கள் மற்றும் பொருட்களைக் கண்காணித்து வருவதாகவும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க - ஷாக் கொடுத்த நிதிஷ் குமார் - திடீர் ஆதரவு வாபஸ்... பாஜகவுக்கு எச்சரிக்கை மணியா...?

மேலும் படிக்க - பட்டப்பகலில் பெண்ணை வெட்டிக்கொன்ற நபர்! பலரும் வேடிக்கை பார்க்கும் காட்சி..வைரல் வீடியோ

மேலும் படிக்க - மத்திய அரசின் இலவச வீடு திட்டத்தில் நிதியுதவி வேண்டுமா? எப்படி விண்ணப்பிப்பது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News