VIDEO: டான்ஸ் ஆடிய டிரம்ப்! பதவியேற்பு விழாவில் எலான் மஸ்க் செய்கையால் சர்ச்சை!

அமெரிக்க அதிபராக நேற்று டோனால்ட் டிரம்ப் பதவியேற்ற நிலையில், பதவியேற்பு விழாவில் நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது. 

Last Updated : Jan 21, 2025, 03:45 PM IST
  • அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப்
  • மேடையில் டோனால்ட் டிரம்ப் நடனமாடினார்
  • எலான் மஸ்க் நாஜி சல்யூட் செய்தது சர்ச்சையை கிளப்பி உள்ளது
VIDEO: டான்ஸ் ஆடிய டிரம்ப்! பதவியேற்பு விழாவில் எலான் மஸ்க் செய்கையால் சர்ச்சை!  title=

அமெரிக்காவின் 47வது அதிபராக டோனால்ட் டிரம்ப் நேற்று(ஜன.20) பதவியேற்றார். அவருடன் இணைந்து துணை அதிபராக ஜே.டி.வான்ஸும் பதவியேற்றார். 

இந்த பதவியேற்பு விழா வாஷிங்டனில் உள்ள கேப்பிடல் என்ற நாடாளுமன்ற கட்டடத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அமெரிக்க அதிபராக டோனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக பதிவியேற்றுள்ளார். முன்னதாக அவர் 2017ஆம் ஆண்டு அதிபராக பதவியேற்றார். தொடர்ந்து 2021ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார். 

200 ஆண்டுகளில் இதுவே முதல்முறை

அமெரிக்க வரலாற்றில் ஒரு அதிபர் தேர்தலில் தோல்வியடைந்து அதன் பின்னர் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று அதிப்ராவது 200 ஆண்டுகளில் இதுவே முதன்முறை ஆகும். 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸை விட அதிக பிரதிநிதித்துவ வாக்குகள் மற்றும் மக்கள் வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். 

பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள்

மெட்டா நிறுவத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பெர்க், எலான் மஸ்க் (டெஸ்லா), டிம் குக் (ஆப்பிள்), சுந்தர் பிச்சை (கூகுள்) உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகள், இந்திய தொழிலதிபரான முகேஷ் அம்பானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

மேலும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பு பிரதிநிதியாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விழாவில் கலந்து கொண்டு பிரதமரின் வாழ்த்து கடிதத்தை டிரம்பிடம் வழங்கினார். 

மேலும் படிங்க: சன்ஸ்கிரீன் பூசாமல் இருப்பதால் ஏற்படும் 7 பாதிப்புகள்!

நடனமாடிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக பதவியேற்ற டோனால்ட் டிரம்ப் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தார். அதனை வெளிப்படுத்தும் விதமாக அவர் மேடையில் நடனமாடிக்கொண்டே கேக்கை வெடினார். 

அவர் கையில் வாளுடன் நடனம் ஆடிக்கொண்டு கேக் வெட்டிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தொடர்ந்து அவர் தனது மனைவி மெலனியா டிரம்ப் உடனும் கைகோர்த்து நடனமாடிய வீடியோவும் வைராகி வருகின்றது. 

நாஜி சல்யூட் அடித்த எலான் மஸ்க் 

டோனால்ட் டிரம்ப் மீண்டும் அதிபரானதை கொண்டாடும் விதமாக எலான் மஸ்க் மேடையில் நடனமாடி தனது கைகளை அசைத்து இறுதியில் 'yesss' என மகிச்சியுடன் கத்தும் வீடியோ வைரலாகி வருகிறது. 

அதேபோல், ஜெர்மன் சர்வாதிகாரியான அடால்ஃப் ஹிட்லர் பாணியில் எலான் மஸ்க் மேடையில் வணக்கம் வைத்துள்ளார். இது உலகளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. 

ஹிட்லரை பின்பற்றும் நாஸிக்கள் கடைபிடிக்கும் பழக்கத்தை எலான் மஸ்க் செய்திருப்பதாக சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். 

மேலும் படிங்க: இந்தியாவின் முதல் சோலார் எலக்ட்ரிக் கார் அறிமுகம்.. 250 கிலோமீட்டர் வரை செல்லுமாம்.. சிறப்பு அம்சங்கள் இதோ!

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News