மதுரை மேலூர் அருகே உள்ள அரிட்டாபட்டி உள்ளிட்ட 48 கிராமங்களில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க கடந்த ஆண்டு நவம்பர் மாதத் தொடக்கத்தில் ஏலத்தின் மூலம் மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது.
இதையடுத்து கிராம மக்கள் கிராம மக்கள் அனைவரும் போராட்டம் நடத்தினர். இரண்டு வாரத்திற்கு முன்பு மதுரையை நோக்கி கூட்டக் கூட்டமாக சுமார் 2000க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பேரணியாகச் சென்றனர்.
டெல்லிக்கு சென்ற போராட்டக்குழுவினர்
தமிழக சட்டப்பேரவையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துச் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக எம்-க்களும் மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தினர். கடும் எதிர்ப்பு வலுத்த நிலையில், மத்திய அரசும் டங்ஸ்டன் திட்டத்தை மறு ஆய்வு செய்ய உத்தரவிட்டு உள்ளது.
தொடர்ந்து கிராம மக்கள் போராட்டமும் நடத்தி வருகின்றனர். இந்த சூழலில் நேற்று (ஜன.21) போராட்டக்குழு நிர்வாகிகள் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்து பேச டெல்லிக்குச் சென்றனர். அவர்களுடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் சென்றனர்.
மேலும் படிங்க: கிரிக்கெட் வாழ்க்கையே முடிந்துவிடும் என பயந்தேன்.. ஆனா - மனம் திறந்த முகமது ஷமி!
இது குறித்து தமிழக அண்ணாமலையும் டங்ஸ்டன் விவகாரத்தில் மகிழ்ச்சிகரமான அறிவிப்பு வரும் எனத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இன்று (ஜன.22) தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் அரிட்டாபட்டி போராட்டக்குழுவினர் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்து பேசி உள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தையில், அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில், டங்ஸ்டன் சுரங்கம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் ஆலோசித்து நாளை (ஜன.௨௩) முடிவு வெளியாகும் என மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
நாளை மகிழ்ச்சிகரமான செய்தி வரும்
இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அண்ணாமலை; டங்ஸ்டன் விவகாரம் தொடர்பாக போராட்ட குழுவுடன் மத்திய அமைச்சரிடம் பேசினோம். பிரதமரை மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி நாளை (ஜன.23) சந்தித்த பின் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகும்.
டங்ஸ்டன் சுரங்கம் முழுமையாக வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். எனவே அரிட்டாபட்டி மக்களுக்கு பாஜக கொடுத்த உறுதிமொழியை நிறைவேற்றுவோம். தமிழக மக்களுடன் விவசாயிகளுடனும் பிரதமர் மோடி எப்போது நிற்பார் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் படிங்க: பெரியாரால் தமிழ், தமிழர்களுக்கு நடந்த நன்மை என்ன? - சீமான் கேள்வி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ