இந்திய இல்லங்களில் பயன்படுத்தக்கூடிய மசாலா வகைகளில் ஏலக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. தேநீர் முதல் பல காய்கறிகளில் ஏலக்காய் பயன்படுத்தப்படுகிறது, ஆனால் ஒரு சிறிய ஏலக்காய் உங்களை பல நோய்களிலிருந்து காப்பாற்ற உதவுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், இரத்த அழுத்தத்தை சீராக வைத்து மாரடைப்பு அபாயத்தைக் குறைப்பதிலும் ஏலக்காய் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. எனவே ஏலக்காயின் மற்ற நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.
இந்த கூறுகள் ஏலக்காயில் உள்ளன
ஏலக்காயில் கார்போஹைட்ரேட், உணவு நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் உள்ளன. அத்தகைய சூழ்நிலையில், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் அதை தங்கள் உணவில் சேர்த்துக்கொண்டால் நன்மை பயக்கும். உண்மையில், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றன.
மேலும் படிக்க | Summer Drink: உடல் வெப்பத்தைத் தணிக்க இந்த கோடைக்கால பானங்களை குடியுங்கள்
ஏலக்காய் சாப்பிடுவதால் இந்த பலன்கள் கிடைக்கும்
* ஏலக்காயை உட்கொள்வது வளர்சிதை மாற்றத்தை விரைவுபடுத்துவதற்கு மிகவும் நன்மை பயக்கும்.
* நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த, உங்கள் உணவில் ஏலக்காயை சேர்த்துக்கொள்ளலாம்.
* ஏலக்காய் சாப்பிடுவதால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் குறைகிறது. அதாவது, இதை சாப்பிடுவதன் மூலம், உங்கள் உடலில் கொலஸ்ட்ரால் கட்டுப்படும்.
* சரியான நேரத்தில் தூக்கம் வராதவர்கள் அல்லது தூக்கமின்மை பிரச்சனை உள்ளவர்கள் கண்டிப்பாக ஏலக்காயை உட்கொள்ள வேண்டும்.
ஏலக்காயை எந்த முறையில் உட்கொள்ள வேண்டும்
* ஏலக்காய் வாய் புத்துணர்ச்சியாக செயல்படுகிறது. ஏலக்காய் விதைகளை நேரடியாக மென்று சாப்பிடலாம்.
* இது தவிர டீயில் ஏலக்காயை போட்டு குடிக்கலாம்.
* எந்த உணவிலும் ஏலக்காயை செர்த்துக்கொள்ளலாம். இதனால் உணவின் சுவையும் அதிகரிக்கும்.
ஏலக்காய் சாப்பிட்டால் என்ன நன்மைகல் கிடைக்கும்
ஏலக்காய் நீரிழிவு நோயாளிகள், ஆஸ்துமா, இதய பாதிப்பு கொண்டவர்கள் என தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பலன் அளிக்கிறது.
மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் மனநிலையை மாற்றும் சக்தி ஏலக்காய்க்கு உண்டு.
பருவநிலை மாற்றத்தின்போது உண்டாகும் சளி, இருமல், காய்ச்சலுக்கு வீட்டு வைத்தியமாக இருக்கிறது.
மனப்பதட்டம், குமட்டல் போன்றவற்றிற்கும் உதவுகிறது. அதோடு நோய் எதிர்ப்பு அழற்ச்சி, பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடும் பண்பு, நோய் எதிர்ப்பு சக்தி என உடலின் எந்த ஆரோக்கிய பாதிப்புகள் நேர்ந்தாலும் அதை எதிர்த்துப் போராடும் ஆற்றல் ஏலக்காய்க்கு உண்டு.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை உறுதி செய்வதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | 3 மாதத்தில் தொப்பை கொழுப்பை குறைக்க இதை செய்தால் போதும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR