JULY 14: உலக அளவில் கொரோனா பாதிப்பு அண்மை நிலவரம்

 உலகளவில்  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,27 1,29,10,357. உலகளவில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,69,128, உலகளவில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 71,16,957

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 14, 2020, 11:59 PM IST
  • உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,29,10,357
  • இந்தியாவில் கொரோனா எண்ணிக்கை 9,06,752 ஆக உயந்தது
  • தமிழகத்தில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கை 1,47,324
JULY 14: உலக அளவில் கொரோனா பாதிப்பு அண்மை நிலவரம் title=

புதுடெல்லி: உலகளவில்  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,27 1,29,10,357. உலகளவில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,69,128, உலகளவில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 71,16,957

இந்தியாவில் இதுவரை மொத்தமாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,06,752 ஆகவும், அதிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 5,71,460 ஆகவும், பலி எண்ணிக்கை 23,174 ஆகவும் உயர்ந்துவிட்டது.

தமிழகத்தில் இன்று 4,526 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. அதில் சென்னையில் மட்டுமே 1,078 பேருக்கு பாதிப்பு. அதேநேரத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 4,743 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 97,310 ஆக உயர்ந்தது. இன்று மட்டும் 67 பேர் மரணமடைந்து உள்ளனர். தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,47,324 ஆக உயர்ந்துள்ளது.

Read Also | COVID-19க்கு சித்த மருத்துவ சிகிச்சை மட்டுமே கொடுக்கும் ஆராய்ச்சி விரைவில் தொடங்கும்

கொரோனாவுக்கான தமிழக அரசின் பிரத்யேக தொலைபேசி உதவி எண்கள்:

1800 120 555550; 044 – 29510400, 044 – 29510500; 044 – 24300300, 044 – 46274446; 9444340496, 8754448477

அதிக COVID-19 இறப்புகளைக் கொண்ட நாடுகளில் இத்தாலியை முந்தி நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது மெக்ஸிகோ.

ஃபுளோரிடா மாகாணத்தில் 15,000 பேருக்கு ஒரே நாளில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.  

தென் ஆப்பிரிக்காவில் மது விற்பனைக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் ஒகினாவாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களில் 94 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது,

Read Also | வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்படுவதும் கொரோனாவின் அறிகுறியா?

கொரோனா நோய்த்தொற்று பாதிப்பின் அடிப்படையில் வெளியிடப்படும் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் முதல் பத்து நாடுகள்:

1. அமெரிக்கா - 33,63,056

2. பிரேசில் - 18,84,967

3. இந்தியா - 9,06,752

4. ரஷ்யா - 7,32,547

5. பெரு - 3,30,123

6. சிலி - 3,17,657

7. மெக்சிகோ - 3,04,435

8. இங்கிலாந்து - 2,91,691

9. தென்னாப்பிரிக்கா - 2,87,796

10. இரான் - 2,59,652

Trending News