ஜியோ நிறுவனம் அதன் பயனர்களுக்கு பல்வேறு ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது. சமீபத்தில் அதன் சக போட்டியாளர்களான BSNL, Vodafone மற்றும் Airtel நிறுவனங்களுக்கு போட்டியைக் கொடுக்கக்கூடிய ரீசார்ஜ் திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
ஜியோவின் புதிய ரீசார்ஜ் திட்டதில் 91 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து 28 நாட்கள் செல்லுபடியாகும் வரம்பற்ற அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100எம்பி டேட்டா + 200 எம்பி கூடுதல் டேட்டாவுடன் கூடிய 3ஜிபி டேட்டாவை பெற முடியும்.
மேலும் ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் போன்றவற்றை இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் வரம்பற்ற அழைப்புடன், 50 SMSம் வழங்கப்படுகிறது.
இதுதவிர ஜியோ சமீபத்தில் ரூ.11க்கு ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. தினசரி டேட்டா முடிந்த பின்னர் பயனர்கள் இந்த ரீசார்ஜ் மூலம் 10ஜிபி 4ஜி டேட்டாவை பெற முடியும்.
நீங்கள் ஜியோ பயனராக இருந்தால், MyJio/Jio.com சென்று ரீசார்ஜ் செய்யலாம் அல்லது அருகிலுள்ள ஜியோ ஸ்டோருக்கு சென்று ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
தற்போது பிஎஸ்என்எல், ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சாட்டிலைட்-டு-டிவைஸ் சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் சிக்னல்கள் இல்லாத இடத்திலும் சேவையை பெற முடியும்.