உத்திர பிரதேசத்தில் உள்ள பாரபங்கியைச் சேர்ந்த 12 ஆம் வகுப்புப் பெண், ஒரு அரிய பிறவி நிலையான செர்விகோவஜினல் அட்ரேசியா என்னும் குறைபாட்டினால் (Cervicovaginal Atresia) பாதிக்கப்பட்டார். 5,000 பெண்களில் ஒருவரைப் பாதிக்கும் இந்த நிலையில், கருப்பையில் இருந்து பிறப்புறுப்புக்கான பாதை இல்லாமல் இருக்கும் அல்லது வளர்ச்சியடையாமல் இருக்கும். கருப்பை வாய் மூடப்பட்டிப்படிருப்பதால் மாதவிடாய் இரத்தம் வெளியேற முடியாமல் கடுமையான வலி ஏற்படும். மாதவிடாய் தடைபடுதல், தீவிர வயிற்று வலி மற்றும் கருவுறுதலில் பிரச்சனைகள் போன்ற கடுமையான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது.
லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் (KGMU) குயின் மேரி மருத்துவமனையின் மருத்துவர்கள் குழு, கர்ப்பப்பை வாய் அட்ரேசியாவால் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெருங்குடலில் பகுதியை பயன்படுத்தி வஜினோபிளாஸ்டி செய்து புதிய சாதனை படைத்துள்ளது. இதில், குடலைப் பயன்படுத்தி கருப்பை வாயிலிருந்து பிறப்புறுப்புக்கு ஒரு பாதை உருவாக்கப்பட்டது. சிக்கலான பிறவி கோளாறுகளுக்கு சிகிச்சையளிப்பதில் இந்த அறுவை சிகிச்சை ஒரு முக்கிய படியாக பார்க்கப்படுகிறது.
பிறவி கோளாறினால் பாதிக்கப்பட்டிருந்த அந்த சிறுமிக்கு முன்னதாக பல அறுவை சிகிச்சைகள் செய்தும் அவரால் நிவாரணம் பெற முடியவில்லை. கருப்பை வாய் மூடப்பட்டிருந்த நிலையில் மாதவிடாய் இரத்தம் வெளியேற முடியாமல், அதில் சேர்ந்ததால் அவளுக்கு கடுமையான வலி ஏற்பட்டது. முன்பு பல மருத்துவர்களும் கருப்பையை அகற்ற அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் படிக்க | உடல் பருமன் குறைய... கொழுப்பு கரைய... நீங்கள் கை விட வேண்டிய சில பழக்கங்கள்
இந்நிலையில் KGMU மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த அவருக்கு, டாக்டர் எஸ்பி ஜெய்ஸ்வர் தலைமையில் டாக்டர். சீமா மெஹ்ரோத்ரா, டாக்டர். பி.எல்.சங்க்வார், டாக்டர். மஞ்சுலதா வர்மா, டாக்டர். ஸ்ருதி மற்றும் குழந்தை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். எஸ்.என். குரில் ஆகியோரின் குழுவினரால் சிக்கலான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது.
சிக்மாய்டு (sigmoid) பெருங்குடலின் வடிவம் மற்றும் திசு பிறப்புறுப்பு திசுக்களை ஒத்திருப்பதால், அறுவை சிகிச்சை வெற்றிகராமக மேற்கொள்ளப்படும் என அதனை தேர்ந்தெடுத்ததாக டாக்டர் எஸ்.என்.குரில் கூறினார். இந்த செயல்முறை அழகியல் ரீதியாக மட்டுமல்லாமல் செயல்பாட்டு ரீதியாகவும் வெற்றிகரமாக இருந்தது. KGMU இன் பெண்ணோயியல் துறையின் தலைவர் டாக்டர் அஞ்சு அகர்வால், இந்த வெற்றியை பிறவி இனப்பெருக்கக் கோளாறுகளுக்கு சிகிச்சையளிப்பதில் ஒரு முக்கிய படி என்று விவரித்துள்ளார்.
மேலும் படிக்க | மூட்டு வலிக்கு முடிவு கட்டும்... சில எளிய வீட்டு வைத்தியங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ