Male Fertility: ஆண் மலட்டு தன்மைக்கு மிக முக்கிய காரணம்

ஆண் மலட்டு தன்மைக்கு மிக முக்கிய காரணத்தை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 25, 2022, 06:03 AM IST
  • ஆண் மலட்டு தன்மைக்கு முக்கிய காரணம்
  • இந்தியாவில் அதிகரிக்கும் ஆண் மலட்டு தன்மை
  • உரிய சிகிச்சை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தல்
Male Fertility: ஆண் மலட்டு தன்மைக்கு மிக முக்கிய காரணம் title=

Male Fertility: ஆண்களின் மலட்டு தன்மையால் பெண்கள் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. இது இந்தியாவில் அண்மைக்காலமாக அதிகரித்து வருவதை நீங்கள் கண்கூடாக பார்க்கலாம். வீதிதோறும் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் அதிகரித்திருப்பதை நீங்கள் பார்த்தாலே, இந்தியாவில் குழந்தையின்மை பிரச்சனை என்பது எந்தளவுக்கு அதிகரித்திருக்கிறது என்பதை உங்களால் யூகித்துக் கொள்ள முடியும். இதற்கு முக்கிய காரணம் ஆண் மலட்டு தன்மையும் ஒன்றாக உள்ளது. 

மேலும் படிக்க | கோடையில் ஆண்கள் கட்டாயம் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்

ஆண்மலட்டு தன்மைக்கு காரணம் என்ன?

ஆண்களின் மலட்டு தன்மைக்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று பிஸியான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்க வழக்கங்கள். இந்த இரண்டு விஷயங்களும் ஆண்களின் மலட்டு தன்மையை அதிகளவு பாதிப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். உண்மையை சொல்லப்போனால் இதில் பெரும்பாலானோர் கவனம் செலுத்துவது கிடையாது.  

திருமணத்திற்குப் பிறகு அதிகரிக்கும் பொறுப்புகள் மற்றும் மன அழுத்தம் ஆகியவற்றால் ஆண்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதன் விளைவாக அவர்கள் தங்கள் உடல்நலனில் கவனம் செலுத்துவதில்லை. இதன் விளைவாக அவர்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிடுகின்றன. விந்தணுக்களின் தரம் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடுகிறது.  

இதுதவிர இன்னொரு முக்கியமான விஷயமும் ஆண் மலட்டு தன்மைக்கு முக்கிய காரணம் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது, பருவநிலை மாற்றம் ஆண்களின் விந்தணு குறைப்பாட்டுக்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். உலகில் வேகமாக மாறிவரும் காலநிலை ஆண்களின் கருவுறுதலைப் பாதிக்கிறது. இதனை பலர் நம்ப மறுக்கிறார்கள் அல்லது விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறார்கள் என கூறுகின்றனர். 

மேலும் படிக்க | Health News: முருங்கையின் மகத்தான மருத்துவ குணங்கள்

தந்தையாக சரியான வயது

நிபுணர்களின் கூற்றுப்படி, 20 முதல் 30 வயது வரை ஆண்களுக்கு தந்தையாவதற்கு சரியான வயது. ஆண்கள் 50 அல்லது அதற்கு மேற்பட்டவர்களாக இருந்தாலும் குழந்தைகளைப் பெறலாம். கின்னஸ் உலக சாதனையின் படி, ஒரு ஆண் தனது 92 வயதில் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். அதேநேரத்தில் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, ஒரு குழந்தையின் பிறப்புக்கு ஆண்களின் வயது மிகவும் முக்கியமானது. 40 வயதுக்கு பிறகு ஆண்களுக்கு தந்தையாகும் வாய்ப்பு மிகமிக குறைவு என கூறுகின்றனர். 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News