அண்ணனுக்கு கொரோனா… வீட்டிற்குள் அடைந்தார் Sourav Ganguly..!!!

சவுரவ் கங்குலியின் தனது மூத்த சகோதரருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Last Updated : Jul 16, 2020, 07:54 PM IST
  • சவுரவ் கங்குலியின் தனது மூத்த சகோதரருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • அவரது அண்ணான சினேகாஷிஷ் கங்குலி வங்காள கிரிக்கெட் சங்கத்தின் (CAB) இணை செயலாளராக உள்ளார்.
  • கங்குலியின் அண்ணன் மனைவி மற்றும் அவர் வழி உறவினர்களுக்கும் கொரொனா தொற்றூ ஏற்பட்டுள்ளது.
அண்ணனுக்கு கொரோனா… வீட்டிற்குள் அடைந்தார் Sourav Ganguly..!!! title=

சவுரவ் கங்குலியின் தனது மூத்த சகோதரருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

வங்காள கிரிக்கெட் சங்கத்தின் (CAB) இணை செயலாளராக இருக்கும் அவரது மூத்த அண்ணனான  சினேகாஷிஷ் (Snehasish) கொல்கத்தாவில் உள்ள பெல்லி வ்யூ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியம் BCCI தலைவரும், இந்தியாவின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி தனது மூத்த சகோதரர் சினேகாஷிஷ் கங்குலிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்ட பின்னர் வீட்டில் குவார்ண்டைனில் உள்ளார்.

ALSO READ | Amazon, Walmart நிறுவனக்களுக்கு சவாலாக உருவெடுக்கும் Reliance …!!!

வங்காள கிரிக்கெட் சங்கத்தின் (சிஏபி) இணை செயலாளராக இருக்கும் சினேகாஷிஷ் கொல்கத்தாவில் உள்ள பெல்லி வ்யூ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்."அவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார், அவருடைய சோதனை அறிக்கை இன்று பாஸிடிவ் என  வந்தது. அவர் பெல்லி வ்யூ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், ”என்று ஒரு CAB அதிகாரி PTI இடம் கூறினார்.

“பரிசோதனை அறிக்கைகள் மாலை தாமதமாக வந்தன. சுகாதார துறையின் நெறிமுறைகளின்படி, சவுரவ் காங்குலி ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வீட்டில் குவாரண்டைனில் இருக்க வேண்டும், ”என்று சவுரவ் காங்குலிக்கு  நெருக்கமான வட்டாரம் கூறியது.

ALSO READ | நேபாளத்தில் தோன்றிய கடும் எதிர்ப்பை அடுத்து U-Turn அடித்த நேபாள பிரதமர் ஒளி

சினேகாஷிஷ் மனைவிக்கும் அவரது  மனைவி வழி  உறவினர்களுக்கு  கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அவர்,  சவுரவ் கங்குலி உடன் பெஹாலாவில் உள்ள அவர்களின் மூதாதையர் வீட்டில் தங்கி இருந்தார்.நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் தொடங்கியதில் இருந்து தன்னைச் சுற்றியுள்ள வாழ்க்கை எவ்வாறு மாறிவிட்டது என்பது குறித்து சவுரவ் பேசியுள்ளார். அவர் வறியவர்களுக்கும் ஏழைகளுக்கும் அத்தியாவசியமான பொருட்களை வழங்கி உதவி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. "எனது சகோதரர் தினமும் எங்கள் தொழிற்சாலைகளுக்கு வருகை தருகிறார், அவருக்கு அதிக ஆபத்து உள்ளது" என்று முன்னாள் ரஞ்சி கிரிக்கெட் வீரரான தனது சகோதரரைப் பற்றி  சவுரவ் காங்குலி முன்பு கூறியிருந்தார். ரூ .50 லட்சம் மதிப்புள்ள அரிசியை நன்கொடையாக அளித்த அவர், பின்னர் பேலூர் மடத்திற்கு 2000 கிலோ அரிசியையும் வழங்கினார்.

"தற்போதைய சூழ்நிலையை நினைத்து நான் மிகவும் வருத்தப்படுகிறேன், ஏனென்றால் பலர் இந்த நோய் தொற்றால் பாதிப்பிற்கு உள்ளாகி வருகிறார்கள். இந்த தொற்றுநோயை எவ்வாறு தடுப்பது என்பதைப் புரிந்துகொள்ள நாங்கள் இன்னும் சிரமப்படுகிறோம், ”என்று சவுரவ் காங்குலி கூறியிருந்தார். "உலகெங்கிலும் உள்ள இந்த சூழ்நிலை என்னை மிகவும் பாதித்தது. இது எப்படி, எப்போது, எங்கிருந்து வந்தது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை என அவர் வருந்தினார்.

Trending News