மத்திய பட்ஜெட் விவசாயிகள், ஏழைகள், மூத்த குடிமக்கள் மற்றும் பெண்கள் பயன்பெறும் வகையில் அமைந்திருக்கிறது என்று மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி கூறியுள்ளார்
2018-19ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார்.
மத்திய பட்ஜெட் குறித்து மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி செய்தியார்களிடம் கூறியதாவது:
உலகிலேயே மிகப்பெரிய தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டத்தை அறிவித்த பிரதமர் மோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வரவு செலவு திட்டம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும், ஏழைகளின் வளர்ச்சிக்காகவும், மூத்த குடிமக்கள் மற்றும் பெண்கள் பயன்பெறும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
I want congratulate Prime Minister Narendra Modi on announcing the world's biggest national health protection scheme. This budget is for the development of the poor, for farmers and increasing their income, senior citizens and women: Union Minister Smriti Irani pic.twitter.com/NseafQcGww
— ANI (@ANI) February 1, 2018