ஆதார் தகவல்கள் ரகசியமாக வெளியானதாக கண்டுபிடித்தவர் மீது வழக்கு!!

ஆதார் தொடர்பானத் தகவல்கள் ரூ.500-க்கு விற்கப்படுவதாக கண்டுபிடித்தவர் மீது டெல்லி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

Last Updated : Jan 8, 2018, 10:39 AM IST
ஆதார் தகவல்கள் ரகசியமாக வெளியானதாக கண்டுபிடித்தவர் மீது வழக்கு!! title=

ஆதார் தொடர்பானத் தகவல்கள் ரூ.500-க்கு விற்கப்படுவதாக கண்டுபிடித்தவர் மீது டெல்லி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலுக்கு தேசிய தனிநபர் அடையாள ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.

ஒருவரின் பெயர், முகவரி, புகைப்படம், கை விரல் ரேகை, கண் விழிப் படலம் உள்ளிட்ட அங்க அடையாளங்களின் அடிப்படையில், குடிமக்கள் அனைவருக்கும் 12 இலக்க ஆதார் எண் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 100 கோடிக்கும் மேற்பட்டோருக்கு இந்த எண் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,முன்னதாக பஞ்சாப் மாநிலத்தில் வெளிவரும் தினசரி நாளிதழ்,  நாட்டு மக்களின் ஆதார் தகவல்கள்  ரூ.500 கொடுத்தால் விற்கப்படும் என சிலவற்றை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டு இருந்தது.

வாட்ஸ் குரூப் ஒன்றில் வெளியான தகவல் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இது தெரியவந்ததாக குறிப்பிடிருந்தது.

அதில், வாட்ஸ் அப் நபரிடம் ரூ.500 கொடுத்து இணையதளம் ஒன்றின் ஐ.டி. மற்றும் பாஸ்வேர்டு பெறப்பட்டது. அந்த இணைப்பில் சென்று பார்த்த போது, கோடிக்கணக்கானோரின் ஆதார் எண்கள், வீட்டு முகவரி, அஞ்சலக பின் கோடு, தொலைபேசி எண்கள் மற்றும் இ-மெயில் முகவரி உள்ளிட்ட பாதுகாக்கப்படவேண்டிய தகவல்கள் அதில் இருந்துள்ளன.

இதுகுறித்து இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) ஏற்கனவே “ஆதார் தகவல்கள் பாதுகாப்பானவை. ஆதார் தகவல்கள் கசியவோ, விற்பனை செய்யப்படவோ இல்லை. ஆதார் தகவல்கள் சட்ட விதிகளை மீறி யாருக்கும் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக வெளியான செய்தி தவறானது” என அறிக்கை வெளியிட்டிருந்தது.

இந்தநிலையில் 100 கோடிக்கும் அதிகமான ஆதார் தகவல்களை மர்ம நபர் ஒருவர் வாட்ஸ் அப் மூலம் ஒரு பத்திரிகைக்கு வழங்கியதாக தகவல் கிடைத்தது குறித்து ஆதார் ஆணைய (உடாய்) துணை இயக்குனர் பி.எம்.பட்நாயக் டெல்லி போலீசில் புகார் செய்தார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது குறித்து விசாரணை நடத்தாமல் பிரதமர் மோடி தட்டிக்கழிப்பதாக காங்கிரஸ் கட்சிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

Trending News