உத்தர பிரதேசத்தில் சீரான மின்விநியோகம் இல்லாத நிலையில் டார்ச் லைட் வெளிச்சத்தில் 32 நோயாளிகளுக்கு கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தின் நவாப்கஞ்ச் பகுதியில் சமூக சுகாதார மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு சீரான மின்விநியோகம் இல்லாத நிலையில் 32 நோயாளிகளுக்கு டார்ச் லைட் வெளிச்சத்தில் கண்புரை அறுவை சிகிச்சை நேற்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு மருத்துவமனையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மாவட்ட நீதிபதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், நோயாளிகளுக்கு சிகிச்சைக்கு பின்னர் படுக்கைகள் எதுவும் இல்லாததால் அவர்கள் தரையில் படுக்க வைக்கப்பட்டனர் என்றும் அவர்களின் உறவினர்கள் சிலர் புகார் அளித்துள்ளனர்.
Health Minister Sidharth Nath Singh removes Chief Medical Officer of Unnao after eye operations of 32 patients in Community Health Center of Nawabganj were done under torchlight yesterday. The patients were later made to lie down on the floor, were referred by a Kanpur based NGO pic.twitter.com/Mt4VI5gNVT
— ANI UP (@ANINewsUP) December 26, 2017