அமரன் திரையரங்கில் குண்டு வீசியது யார்? விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்!

Amaran Movie: நெல்லை அமரன் படம் ஓடிய திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; திரையரங்கை பார்வையிட வந்த இந்து முன்னனி அமைப்பினரை போலிசார் தடுத்ததால் பரபரப்பு.

Written by - RK Spark | Last Updated : Nov 16, 2024, 03:12 PM IST
    நெல்லையில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்.
    இந்து முன்னனி அமைப்பினர் தடுத்து நிறுத்தம்.
    போலீசார் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அமரன் திரையரங்கில் குண்டு வீசியது யார்? விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்! title=

சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவான அமரன் படம் கடந்த தீபாவளி அன்று திரையரங்கில் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான இப்படம் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்த வாரம் சூர்யாவின் கங்குவா படம் வெளியாகி இருந்த போதிலும் நிறைய திரையரங்குகளில் இன்னும் அமரான் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்க்கையில் இந்த படம் ஒரு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | IRCTC மட்டுமல்ல... இந்த செயலிகளிலும் டிக்கெட் புக் செய்யலாம்... ஆஃபர்களும் உண்டு

மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உண்மை சம்பவங்களை கொண்டு இப்படம் எடுக்கப்பட்டிருந்தது. இந்த படம் வெளியான பின்பு பல்வேறு தரப்பினரும் படத்தில் சம்பந்தப்பட்ட சில காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இருப்பினும் திரையரங்குகளுக்கு மக்கள் கூட்டம் அதிகப்படியாக இருந்தது.  மேலும் விநியோகிஸ்தர் தரப்பிலிருந்து படத்தின் OTT ரிலீஸ் தேதியை தள்ளி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. 

திரையரங்கில் குண்டு வீச்சு

நெல்லை மேலப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள அலங்கார் சினிமாஸ் திரையரங்கில் இன்று அதிகாலை மர்ம நபர்கள்  இருவர் பெட்ரோல் குண்டு வீசி தப்பி சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக மேலப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மூன்று பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாகவும், இருவர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் கண்டறியப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. மோப்பநாய், தடய அறிவியல் துறையினர், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது. மேலும் சம்பவ இடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகளை தேடும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் எதிரொலியாக இன்று காலை ஒளிபரப்ப கூடிய இரண்டு காட்சிகளும் ரத்து செய்வதாக திரையரங்க நிர்வாகம் அறிவிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே முன்பதிவு செய்து இருந்த ரசிகர்கள் திருப்பி அனுப்பி அவர்கள் பணத்தை திருப்பிக் கொடுத்தனர். இந்த நிலையில் வெடிகுண்டு வைத்து சம்பவத்தில் பாதிக்கப்பட்ட திரையரங்கை பார்வையிட இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி பி ஜெயக்குமார் தலைமையில் இந்து முன்னணி அமைப்பினர் வருகை தந்தனர். இந்த நிலையில் போலீசார் திரையரங்கில் விசாரணை நடப்பதாக கூறி இந்து முன்னணியினர் தடுத்து நிறுத்தினர்.

இதனை கண்டித்து விபி ஜெயக்குமார் தலைமையில் முன்பு திடீரென ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணியினர் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீசார் முன் அனுமதி பெறாமல் சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்கு வழி வகுக்கும் வகையில் செயல்பட்டதாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்து முன்னணியினர் அனைவரையும் கைது செய்தனர். அதனால் போலீசாருக்கும் இந்து முன்னணியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது தொடர்ந்து பல்வேறு பிரிவு சார்ந்த காவல் துறையினர் திரையரங்கு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விசாரணையை தீவிர படுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க | ரேஷன் கார்டில் இந்த பிரச்சனை இருந்தால் மகளிர் உரிமை தொகை வராது!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News