மூளை முதல் இதயம் வரை... தண்ணீர் விட்டான் கிழங்கு என்னும் மூலிகை செய்யும் மாயங்கள்

உடல் ஆரோக்கியத்திற்கு வரப்பிரசாதமாக கருதப்படும் பல வகை மூலிகைகளை ஆயுர்வேதம் நமக்கு அளித்துள்ளது. அத்தகைய மூலிகைகளில் ஒன்று சதாவரி என்று அழைக்கப்படும் தண்ணீர் விட்டான் கிழங்கு.  

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 14, 2024, 04:00 PM IST
  • சதாவரியில் பொதிந்துள்ள மருத்துவ குணங்கள் அதன் முக்கியத்துவத்தை பன்மடங்கு அதிகரிக்கின்றன.
  • அமிலேஸ் நம் உடலில் உள்ள கார்போஹைட்ரேட்டுகளை ஜீரணிக்க உதவுகிறது.
  • மன அழுத்தத்தை மிகச் சிறந்த முறையில் கட்டுப்படுத்தலாம்.
மூளை முதல் இதயம் வரை... தண்ணீர் விட்டான் கிழங்கு என்னும் மூலிகை செய்யும் மாயங்கள் title=

உடல் ஆரோக்கியத்திற்கு வரப்பிரசாதமாக கருதப்படும் பல வகை மூலிகைகளை ஆயுர்வேதம் நமக்கு அளித்துள்ளது. அத்தகைய மூலிகைகளில் ஒன்று சதாவரி. தண்ணீர் விட்டான் கிழங்கு என்றும் அழைக்கப்படும் இந்த மூலிகை அற்புதமான பண்புகளைக் கொண்டுள்ளது. கொடி வகையைச் சேர்ந்த அடர் பச்சையில் ஊசி போன்ற இலைகளையும் முட்கள் நிறைந்த தண்டினையும் கொண்ட தாவரத்தின் அடிவேர்தான் தண்ணீர்விட்டான் கிழங்கு.

சதாவரி ஆரோக்கியத்தின் பொக்கிஷம்

சதாவரியில் பொதிந்துள்ள மருத்துவ குணங்கள் அதன் முக்கியத்துவத்தை பன்மடங்கு அதிகரிக்கின்றன. ஆயுர்வேத நிபுணரான டாக்டர் அமித் குமார், ஆயுர்வேதத்தில் தண்ணீர்விட்டான் கிழங்கு பல நோய்களை தீர்க்கும் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது என்று கூறினார். அதேசமயம், இதன் பச்சை இலைகளை தினசரி சலையலில் சேர்த்தால், அது மக்களுக்கு ஒரு சூப்பர்ஃபுட் ஆக செயல்படும் என்றார்.

தண்ணீர்விட்டான் கிழங்கின் நன்மைகள்

டாக்டர் அமித் தண்ணீர்விட்டான் கிழங்கின் நன்மைகள் குறித்து கூறும்போது, ​​“தண்ணீர் விட்டான் கிழங்கில் உள்ள பல வகையான பைட்டோநியூட்ரியன்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், இதய நோய்கள், புற்றுநோய் மற்றும் மாசுபாட்டால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து உடலைப் பாதுகாக்க (Health Tips) உதவுகிறது. இது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மட்டுமின்றி மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. ஏனெனில் இதில் உள்ள ஃபோலேட் மனநிலையை மேம்படுத்துகிறது மற்றும் மன அழுத்தத்தை சமாளிக்கும் திறனை அதிகரிக்கிறது. சதாவரியை உட்கொள்வதன் மூலம் மன அழுத்தத்தை மிகச் சிறந்த முறையில் கட்டுப்படுத்தலாம்” என்றார்.

செரிமான ஆரோக்கியம்

சதாவரி மனித உடலில் லிபேஸ் மற்றும் அமிலேஸின் செயல்பாடுகளை அதிகரிப்பதன் மூலம் செரிமானத்தை மேம்படுத்துகிறது. இதில் உள்ள லிபேஸ் என்ற தனிமம் நம் உடலில் உள்ள கொழுப்பை ஜீரணிக்க உதவுகிறது, அதே நேரத்தில் அமிலேஸ் நம் உடலில் உள்ள கார்போஹைட்ரேட்டுகளை ஜீரணிக்க உதவுகிறது.

மேலும் படிக்க | நீரிழிவு நோயாளிகள் தேன், வெல்லம் சாப்பிடலாமா? என்ன ஆகும்?

பெண்களுக்கு அருமருந்து

கர்ப்ப காலத்தில் பலவித பிரச்சனைகளை எதிர்கொள்ளும் பெண்களுக்கு தண்ணீர் விட்டான் கிழங்கு எந்த வகைகளில் நன்மைகளை பயக்கும் என்பதுபற்றி டாக்டர் அமித் கூறுகையில், “இப்போது பல பெண்கள் கருத்தரிப்பதில் பல சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள். சதாவரி இந்தப் பிரச்சனையை நீக்குவதற்கு உதவியாக இருக்கும். இது ஹார்மோன் ஏற்றத்தாழ்வை மேம்படுத்த உதவுகிறது, இது மாதவிடாய் தொடர்பான பிரச்சனைகளை நீக்கி மற்றும் கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது."

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

சதாவரி நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது, ஏனெனில் இது அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது பருவகால நோய்த்தொற்று அபாயத்தை குறைக்கிறது மற்றும் உடலின் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்துகிறது. 

மூளை ஆரோக்கியம் 

தண்ணீர் விட்டான் கிழங்கில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மூளை தொடர்பான பிரச்சனைகள், இதய நோய்கள், புற்றுநோய் மற்றும் மாசு தொடர்பான பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது. இது அல்சைமர் அபாயத்தையும் குறைக்கிறது. ஏனெனில் இதில் வைட்டமின் ஈ மற்றும் ஃபோலேட் உள்ளது, இது மூளையை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், அது தொடர்பான பிரச்சனைகளைத் தவிர்க்கவும் உதவுகிறது.

நிம்மதியான தூக்கம்

தூக்கமின்மை பிரச்னை இருந்தால், சதாவரி என்னும் தண்ணீர் விட்டான் கிழங்கு அதற்கான தீர்வைத் தரலாம் என்றார் டாக்டர் அமித். இது தூக்கத்தை மேம்படுத்த உதவுகிறது. உடலை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது. மனதிற்கு அமைதியை வழங்குகிறது.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | சோர்வு, பலவீனம், ஞாபக மறதி இருக்கா? வைட்டமின் பி12 குறைபாடா இருக்கலாம்... உடனடி கவனம் தேவை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News