61 Year Old Woman Gave Birth To Her Grand Child : அமெரிக்காவை சேர்ந்த சாரா என்ற பெண், குழந்தை பெற்றுக் கொள்ள முடியாமல் பிரச்சனைகளை சந்தித்து இருக்கிறார். அதே நேரத்தில் அவர் வேறு குழந்தையை தத்தெடுக்கவும் விரும்பவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த போது தான் அவருக்கு ஒரு யோசனை தோன்றி இருக்கிறது. தன் குழந்தையை பெற்றெடுக்குமாறு தனது 61 வயது தாயான Kristine Casey-யிடம் உதவி கேட்டிருக்கிறார்.
பேரனை பெற்றெடுத்த பெண்!
இந்த சம்பவம் 2004 ஆம் ஆண்டு நடந்திருக்கிறது. அந்த ஆண்டில் அமெரிக்காவை சேர்ந்த Connel என்ற பெண்ணுக்கு அப்போது 34 வயது. இந்த சமயத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள அவருக்கு கடினமான சூழலாக அமைந்துள்ளது. இதற்காக பலவித மருத்துவ பரிசோதனைகளையும் மேற்கொண்ட அவர், சில நாட்கள் கழித்து கர்ப்பமாகி இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்திருக்கிறார். ஆனால் அந்த இரண்டு குழந்தைகளுமே இறந்து பிறந்துள்ளன. இவர் இப்படி மனமுடைந்து இருந்த சமயத்தில், அவரது தாயும் தனது வேலையில் இருந்து ஓய்வு பெற்று மன அமைதியைத் தேடிக் கொண்டிருந்தார். அப்போதுதான் Connellக்கு ஒரு யோசனை தோன்றியிருகிறது.
குழந்தையை surrogacy முறை மூலம் பெற்று தருமாறு, தனது தாயிடம் உதவி கேட்டிருக்கிறார், கனெல். தனது மகள் இப்படி ஒரு உதவியை கேட்டவுடன் அந்த தாய் உடனே மறக்காமல் அதை செய்வதாக வாக்களித்து இருக்கிறார். இருப்பினும் 61 வயதில் ஒருவர் குழந்தை பெற்றுக் கொள்வது என்பது பெரிய விஷயமாகும். இதனால் மருத்துவர்கள் எந்த பிரச்சனையும் வராது என கிரீன் சிக்னல் கொடுத்த பின்பு குழந்தையை பெற்றெடுக்கும் மருத்துவ பரிசோதனை முயற்சிகள் நடைபெற்றன.
நடந்த விஷயங்கள்…
அந்த 61 வயது பெண் தனது கர்ப்பப்பையை இளமையாக்கும் ஹார்மோன்களை எடுத்துக் கொண்டுள்ளார். அதன் பின்னர் அவருக்கு surrogacy முறை நடைபெற்று உள்ளது. இதில் இரண்டாம் முயற்சியில் அவர் கர்ப்பம் தரித்துள்ளார். எந்த பிரச்சனையும் இல்லாமல் இவருக்கு பிரசவ காலம் நடைபெற்று, C section முறையில் குழந்தை பிறந்திருக்கிறது. இந்த பிரசவத்திற்கு பிறகு அந்த பெண்ணுக்கு, சிறுநீரக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ஆனால் அதிலிருந்து அவர் சீக்கிரமாக குணமாகி இருக்கிறார்.
வயதான பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்வது இது முதன்முறையல்ல. வர்ஜினியாவில், 55 வயது பெண் ஒருவர் இதே 2004ஆம் ஆண்டில், 3 குழந்தைகளை பெற்றெடுத்திருக்கிறார். 2007ஆம் ஆண்டில் ஒரு பெண் Surrogacy முறையில் ஒருவருக்கு குழந்தை பெற்று கொடுத்திருக்கிறார்.
மேலும் படிக்க | 96 ஆண்டுகளாக ஒரு குழந்தை கூட பிறக்காத ஒரே நாடு எது தெரியுமா?
மேலும் படிக்க | ஊழியர்களுக்கு 70 கோடி போனஸ் தந்த நிறுவனம்..அள்ள அள்ள பணம்! வைரல் வீடியோ..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ