அடல் பென்ஷன் யோஜனா 18 முதல் 40 வயது வரை உள்ள அனைத்து இந்திய குடிமக்களுக்கான திட்டம் ஆகும். மத்திய அரசு, சமூக பாதுகாப்பு திட்டமாக அடல் பென்ஷன் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், மத்திய அரசு குறைந்தபட்ச ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. தற்போது அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் கீழ் மாதந்தோறும் அதிகபட்சமாக 5000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இந்த ஓய்வூதியத் தொகையை இரட்டிப்பாக்க அரசு தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பட்ஜெட்டில் வெளியாகும் முக்கிய அறிவிப்பு
குறைந்தபட்ச உத்திரவாத ஓய்வூதிய தொகையை 5000 ரூபாயில் இருந்து 10,000 ரூபாயாக உயர்த்துவதற்கான முன்மொழிவு இறுதி கட்டத்தில் உள்ளதாகவும், இதில் ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது. இன்று, பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு வலுவாக உள்ளது.
தினசரி பங்களிப்பு 7 ரூபாய்
அடல் பென்ஷன் யோஜனா 18 முதல் 40 வயது வரை உள்ள அனைத்து இந்திய குடிமக்களுக்கான திட்டம் ஆகும். இந்தத் திட்டம் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (PFRDA) நடத்தப்படுகிறது. 5000 ரூபாய் ஓய்வூதியம் பெற, மாதம் 210 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும், அதில் தினசரி பங்களிப்பு 7 ரூபாய். இத்திட்டத்தில், அதிகபட்ச பங்களிப்பு 42 ஆண்டுகளுக்கும், குறைந்தபட்ச பங்களிப்பு 20 ஆண்டுகளுக்கும் செலுத்தப்பட வேண்டும்.
மேலும் படிக்க | ஓய்வூதியர்கள் கூடுதல் பென்சன் குறித்து ஹாப்பி நியூஸ்! யாருக்கு எவ்வளவு கிடைக்கும்?
ஓய்வூதியம் தொடங்கிய பிறகு சந்தாதாரர் இறந்தால், அவரது வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் அவரது மனைவிக்கு வழங்கப்படும்.
சந்தாதாரர் மற்றும் அவரது மனைவி இருவரும் இறந்தால், 60 ஆண்டுகளாக ஓய்வூதிய நிதியில் டெபாசிட் செய்யப்பட்ட தொகை மொத்தமாக நாமினிக்கு திருப்பித் தரப்படும்.
APY திட்டத்திற்கு ஆஃப்லைன் முறையில் விண்ணப்பிக்கும் முறை
உங்களுக்கான சேமிப்புக் கணக்கு உள்ள வங்கிக்கு சென்று, APY திட்டத்திற்கான பதிவு படிவத்தை பெற்றுக் கொண்டு, அத படிவத்தில், அதில் கோரப்பட்டுள்ள சரியான தகவலை நிரப்பி எவ்வளவு ஓய்வூதியம் தேவை என்பதற்கான ஆப்ஷனை தேர்வு செய்யவும். படிவத்துடன் ஆதார் அட்டை மற்றும் தேவையான பிற ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். பின்னர், உங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதை உறுதி செய்யும் வகையில், உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு SMS செய்தி அனுப்பப்படும்.
APY திட்டத்திற்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கும் முறை
உங்களுக்கான சேமிப்புக் கணக்கு உள்ள வங்கி போர்டல் அல்லது வங்கி மொபைல் செயலியில் லாக் இன் செய்து, ‘Social Security Scheme' அல்லது 'அடல் ஓய்வூதியத் திட்டம்' என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, விண்ணப்பப் படிவத்தை நிரப்பி தேவையான அனைத்து தகவல்களையும் வழங்க வேண்டும். பென்ஷன் திட்டத்திற்கான மாதாந்திர பங்களிப்புகளுக்கு ஆட்டோ-டெபிட் மூலம் உங்கள் கணக்கில் இருந்து பணம் பெறப்படும்..
பிரதமர் நரேந்திர மோடி, தனது முதல் பதவி காலத்தில், முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பெயரில், இந்த திட்டத்தை 2015 மே 9ம் தேதி அன்று தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ