மத்திய அரசின் சோலார் மின் திட்டமான பிரதம மந்திரி சூர்யா கர் முஃப்ட் பிஜ்லி யோஜனா (PM Surya Ghar Muft Bijli Yojana) என்ற திட்டம் தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், இது வரை 8.6% என்ற இலக்கை எட்டியுள்ளது. மூன்று ஆண்டுகளில் 1 கோடி வீடுகளில் சோலார் பேனல்களை நிறுவுவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தின் முதல் ஆண்டிலேயே 8,61,240 வீடுகளில் மேற்கூரை சோலார் அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன. சோலார் மின் திட்டத்தின் கீழ் மொத்தம் 43,99,431 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஜனவரி 29 வரை மொத்தப் பதிவு ரூ. 1.7 கோடியாக அதிகரித்துள்ளது. இதற்காக ஒதுக்கப்பட்ட ரூ.78,000 கோடியில் இதுவரை மொத்தம் ரூ.4,966 கோடி மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது.
மாதம் தோறும் 300 யூனிட் இலவசம்
வீட்டின் கூரைகளில் சோலார் பேனல் பொருத்துபவர்களுக்கு, மத்திய அரசு மானியம் வழங்குவதோடு, இதற்கான வங்கி கடன் உதவியும் கிடைக்கும். சோலார் யூனிட்டுகளை நிறுவுவதன் மூலம், மாதம் தோறும் 300 யூனிட் என்று அளவிற்கு இலவச மின்சாரத்தையும் பெறலாம்.
சோலார் பேனல்களுக்கு கிடைக்கும் மானிய உதவி விபரம்
வீடுகளின் மேல் கூரைகளில் சூரிய எரிசக்திக்கான சோலார் பேனல்களை நிறுவ, மத்திய அரசு மானியம் வழங்கும். 2 கிலோவாட் திறன் கொண்ட பேனலுக்கு 60% மானியமும், 2 முதல் 3 கிலோவாட் திறன் கொண்ட சோலார் பேனல்களுக்கு 40% மானியமும் கிடைக்கும். அதாவது, 1 கிலோவாட் திறன் கொண்ட அமைப்புக்கு ரூ.30,000 மானியமும், 2 கிலோவாட் திறன் கொண்ட சோலார் அமைப்புக்கு ரூ.60,000 மானியமும், 3 கிலோவாட்டுக்கு ரூ.78,000 மானியமும் கிடைக்கும்.
2027 மார்ச் மாதத்திற்குள் 1 கோடி வீடுகளில் சோலார் பேனல் அமைக்க திட்டம்
2025 மார்ச் மாதத்திற்குள் 10 லட்சம் வீடுகளில் சோலார் பேனல்கள் பொருத்தப்படும் என அரசு மதிப்பிட்டுள்ளது. 2025 அக்டோபர் மாதத்திற்குள் 20 லட்சம் வீடுகளில் பேனல்களையும், 2026 மார்ச் மாதத்திற்குள் 40 லட்சம் வீடுகளில் பேனல்களையும், 2027 மார்ச் மாதத்திற்குள் 1 கோடி வீடுகளில் சோலார் பேனல்களையும் பொருத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் சோலார் பேனல்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்
FY26 மற்றும் FY27 நிதியாண்டுகளில் சோலார் பேனல்கள் நிறுவல் வேகமாக அதிகரிக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். முதல் ஆண்டில், பொதுத் தேர்தல்கள் மற்றும் மாநிலத் தேர்தல்கள் காரணமாக பணி சற்று மந்தமாக இருந்தது. அதே நேரத்தில், அடுத்த இரண்டு ஆண்டுகளில் அரசாங்க செயல்முறைகள் எளிதாகிவிடும், இது சோலார் பேனல்கள் நிறுவலை விரைவுபடுத்தும்.
பிரதமர் சூர்யா கர் யோஜனாவின் சிறப்பு அம்சம்
பிரதம மந்திரி சூர்யா கர் யோஜனா என்பது இந்திய அரசின் ஒரு லட்சியத் திட்டமாகும். இது ஒவ்வொரு வீட்டையும் சூரிய சக்தியுடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வீடுகளில் சோலார் பேனல்கள் அமைக்க அரசு மானியம் வழங்குகிறது. இதனால் மின்கட்டணம் குறைவது மட்டுமின்றி, சுற்றுச்சூழலுக்கும் (பசுமை ஆற்றல்) நன்மை ஏற்படும். இத்திட்டத்தின் மூலம், அரசு 78,000 கோடி ரூபாய் மானியம் வழங்குகிறது. இத்திட்டம் மக்களுக்கு இலவச மின்சாரம் வழங்குவது மட்டுமின்றி சுத்தமான எரிசக்தி பயன்பாட்டை ஊக்குவிக்கும்.
இந்தியாவை தன்னிறைவாக மாற்றுவதற்கான நடவடிக்கை
முதல் ஆண்டில் 8.6% இலக்கை எட்டியிருந்தாலும், பிரதமர் சூர்ய கர் யோஜனா அடுத்த இரண்டு ஆண்டுகளில் மேலும் அதிக அளவில் சோலார் பேனல்கள் நிறுவப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசின் இந்த திட்டம், ஒவ்வொரு வீட்டிற்கும் இலவச மின்சாரம் வழங்குவது மட்டுமின்றி, சுத்தமான எரிசக்தியின் திசையில் இந்தியாவை முன்னோக்கி கொண்டு செல்லவும் உதவும்.
மேலும் படிக்க | PF உறுப்பினர்களுக்கு அரசின் பரிசு: உமங் செயலி மூலமே இனி PF பணம் எடுக்கலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ