உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் ஒரு ஆர்டருக்கு எவ்வளவு சம்பளம் பெறுகிறார்கள் தெரியுமா?

தற்போது ஆன்லைனில் உணவு மற்றும் மளிகை பொருட்கள் ஆர்டர் செய்யும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஒரு டெலிவரி ஊழியர் எவ்வளவு சம்பாதிக்கிறார் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

Written by - RK Spark | Last Updated : Feb 2, 2025, 06:57 PM IST
  • வேகமாக வளர்ந்து வரும் டெலிவரி சேவை.
  • உணவு, மளிகை பொருட்கள் டெலிவரி செய்யப்படுகிறது.
  • வீட்டிற்கு தேவையான பொருட்களையும் பெற்று கொள்ளலாம்.
உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் ஒரு ஆர்டருக்கு எவ்வளவு சம்பளம் பெறுகிறார்கள் தெரியுமா? title=

ஆன்லைனில் உணவு டெலிவரி சேவைகள் நீண்ட காலமாக இருந்து வந்தாலும், தற்போது வேகமாக வளர்ந்து வருவது மளிகை பொருட்கள் டெலிவரி தான். Zepto, Blinkit மற்றும் Swiggy Instamart போன்ற நிறுவனங்கள் மளிகை பொருட்கள் டெலிவரி மூலம் மிகப்பெரிய வளர்ச்சியை கண்டுள்ளன. அவை மக்களுக்கு வசதியை வழங்குவதோடு மட்டுமல்லாமல், டெலிவரி பணியாளர்களுக்கு வேலை வாய்ப்புகளையும் உருவாக்குகின்றன. இந்த பிளாட்ஃபார்ம்களில் வேலை செய்யும் டெலிவரி ஊழியர்கள் எவ்வளவு சம்பாதிக்கின்றனர் என்று யோசித்தது உண்டா?

மேலும் படிக்க | Ayushnman Card: மூத்த குடிமக்களுக்கு ரூ.5,00,000.... ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

ஒரு ஆர்டருக்கு அவர்கள் எவ்வளவு வருமானம் பெறுகின்றனர், ஒரு நாள் முழுவதும் டெலிவரி செய்தால் எவ்வளவு வருமானம் பெறுகின்றனர் என்பதை தெரிந்து கொள்ள சிலருக்கு ஆர்வம் இருக்கும். ஒரு ஆர்டருக்கு குறிப்பிட்ட சம்பளம் மற்றும் ஊக்கத்தொகை போன்றவற்றின் மூலம் டெலிவரி செய்யும் ஊழியர்கள் வருமானம் பெறுகின்றனர். மேலும் சில நிறுவனங்கள் ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளையும் வழங்குகிறது. குறிப்பிட்ட கால அளவுக்குள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான டெலிவரிகளை செய்தால் ஊக்கத்தொகை கொடுக்கப்படுகிறது. இத்தகைய சலுகைகள் அவர்களின் ஒட்டுமொத்த வருவாயை கணிசமாக உயர்த்த உதவுகிறது.

ஆன்லைன் டெலிவரியில் எப்படி வேலைக்கு சேருவது?

ஆன்லைனில் மளிகை அல்லது உணவு விநியோகம் செய்ய ஆர்வமுள்ளவர்கள், சம்பத்தப்பட்ட நிறுவனத்தின் ஆப் அல்லது அலுவலகங்களுக்கு சென்று விண்ணப்பிக்கலாம். இதற்கு ஆதார் அட்டை மற்றும் பிற அடையாள ஆவணங்கள் உங்களிடம் இருக்க வேண்டும். தேவையான விவரங்களைப் பூர்த்தி செய்து, உங்கள் தகவலை நிறுவனத்திடம் சமர்ப்பித்தவுடன் அவர்கள் பணி நியமனங்களை வழங்குவார்கள். டெலிவரி செய்யும் ஊழியர்களிடம் சொந்தமாக இரு சக்கர வாகனம் வைத்திருப்பது கட்டாயம்.

டெலிவரியின் போது விபத்து ஏற்பட்டால்?

டெலிவரி செய்யும் போது விபத்து ஏற்பட்டால் நிறுவனங்கள் டெலிவரி செய்பவர்களின் மருத்துவ செலவுக்கான முழு பணத்தையும் ஏற்கின்றனர். அதே போல அனைத்து டெலிவரி ஊழியர்களுக்கும் காப்பீடு விருப்பமும் உள்ளது; இருப்பினும் ஒரு சில நிறுவனங்கள் காப்பீடுக்கு கட்டணமும் வசூலிக்கின்றனர். இதற்காக ரூ. 1500 முதல் ரூ. 2000 வரை பிடித்தம் செய்து கொள்கின்றனர்.

தவறு நடந்தால் யார் பொறுப்பு?

பொருட்களை டெலிவரி செய்யும் போது டெலிவரி ஊழியர்கள் ஏதேனும் பிரச்சனை செய்தால் அவர்களுக்கு எதிராக புகார்களை பதிவு செய்ய வாடிக்கையாளர்களுக்கு வழிகள் உள்ளது. ஆனால் வாடிக்கையாளர்கள் ஏதேனும் தவறு செய்தால் அது குறித்து புகார் தெரிவிக்க டெலிவரி ஊழியர்களுக்கு எந்த ஒரு வாய்ப்பும் இல்லை. இருப்பினும் ஒரு சில நிறுவனங்கள் தங்கள் ஆப்பில் ஒரு அவசரகால பொத்தானை வைத்துள்ளனர். ஏதேனும் அசம்பாவித சமயத்தில் இதனை அழுத்தினால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் சென்று உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

எவ்வளவு சம்பாதிக்கின்றனர்?

பொதுவாக, டெலிவரி செய்யும் ஊழியர்கள் ஒவ்வொரு ஆர்டருக்கும் அடிப்படை ஊதியத்தைப் பெறுகிறார்கள். உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் ஒவ்வொரு ஆர்டருக்கும் ரூ.30 முதல் ரூ.100 வரை பெறுகிறார்கள். மேலும் இந்த சம்பளம் ஒரு ஆர்டருக்கான தூரத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. அதாவது ஒரு வாடிக்கையாளர் ரூ. 50 அல்லது  ரூ. 500 என எந்த தொகைக்கு ஆர்டர் செய்தாலும் சம்பளம் கிலோமீட்டர் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. மளிகை பொருட்களை டெலிவரி ஊழியர்களுக்கு ஒரு ஆர்டருக்கு ரூ. 15 முதல் ரூ. 50 வரை பெறுகின்றனர்.

மேலும் படிக்க | IRDAI New Rules... மூத்த குடிமக்களுக்கான மருத்துவக் காப்பீட்டில் நிவாரணம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News