சச்சின் டெண்டுல்கருக்கு பிசிசிஐ-யின் வாழ்நாள் சாதனையாளர் விருது!

கிரிக்கெட்டின் கடவுள் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கருக்கு பிசிசிஐ-ன் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது. 

Written by - R Balaji | Last Updated : Jan 31, 2025, 07:03 PM IST
  • கிரிக்கெட்டின் கடவுள் என சச்சின் டெண்டுல்கர் அழைக்கப்படுகிறார்
  • 664 சர்வதேச போட்டிகளில் விளையாடி பல சாதனைகளை படைத்துள்ளார்
  • இவருக்கு பிசிசிஐ-யின் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது
சச்சின் டெண்டுல்கருக்கு பிசிசிஐ-யின் வாழ்நாள் சாதனையாளர் விருது!   title=

Sachin Tendulkar to get lifetime achivement award: இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாது உலக ரசிகர்களால் கொண்டாடப்படும் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச போட்டிகளில் பல சாதனைகளை படைத்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ), ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு சி.கே.நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்க உள்ளது. இந்த விருது நாளை நடைபெறும் பிசிசிஐ-யின் வருடாந்திர விழாவில் டெண்டுல்கருக்கு வழங்கப்படுகிறது.

பிசிசிஐ-யின் இந்த வாழ்நாள் சாதனையாளர் விருது கடந்த 1994ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்திய அணியின் முதல் கேப்டன் சி.கே.நாயுடுவை கெளரவிக்கும் விதமாக இந்த விருது உருவாக்கப்பட்டது. இதுவரை 30 பேர் இந்த விருதினை பெற்ற நிலையில், 31வது நாளாக சச்சின் டெண்டுல்கர் பெற உள்ளார். 

மேலும் படிங்க: IND vs ENG | இந்திய அணியின் பிளேயிங் லெவனில் மிகப்பெரிய மாற்றம்..! சஞ்சு இடம் தப்புமா?

ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இந்திய அணிக்காக 664 சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ள சச்சின் டெண்டுல்கள் 200 டெஸ்ட் மற்றும் 463 ஒருநாள் போட்டிகளில், டெஸ்ட் மற்றும் ஒருநாள் வடிவில் அதிக எண்ணிக்கையிலான போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையையும் தன்வசம் வைத்துள்ளார். 

தனது 16 வயதில் இந்திய அணிக்காக விளையாடிய தொடங்கிய சச்சின் டெண்டுல்கர், 20 ஆண்டுகளுக்கும் மேலாக கிரிக்கெட் துறையில் பயணித்து அதிக சதம் அடித்த வீரர், ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் இந்திய வீரர், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை சச்சின் டெண்டுல்கர் படைத்துள்ளார். 

சச்சின் டெண்டுல்கர் 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 15,921 ரன்களும், 463 ஒருநாள் போட்டிகளில் 18,426 ரன்களும் விளையாசியுள்ளார். ஒரே ஒரு சர்வதேச டி20 போட்டியில் இவர் விளையாடி இருந்தாலும் கிரிக்கெட் விளையாட்டில் அவர் ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியதாகும்.   

கடந்த 2023ஆம் ஆண்டுக்கான பிசிசிஐ-யின் இந்த வாழ்நாள் சாதனையாளர் விருது இந்திய அணியின் முன்னாள் வீரரும், பயற்சியாளருமான ரவி சாஸ்திரிமற்றும் விக்கெட் கீப்பிங் ஜாம்பவான் ஃபரூக் இன்ஜினியருக்கும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.   

மேலும் படிங்க: சாம்பியன்ஸ் டிராபி 2025: ரோகித் சர்மா பாகிஸ்தான் செல்ல தேவையில்லை.. ஐசிசி அதிரடி முடிவு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News