உலர் பழங்களின் ராஜா என்று அழைக்கப்படும் வாதுமை பருப்பு (Walnut), மூளைக்கு ஆற்றலை வழங்கக் கூடியது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், அது மூளைக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ள உலர் பழமாகும். குறிப்பாக, முதுமையை விரட்டி அடித்து, இளமையை தக்க வைத்துக் கொள்ள வாதுமை பருப்பு உதவும். இதில் உள்ள ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது பல நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்க உதவுகிறது.
ஆரோக்கியமான கொழுப்பு, நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் வாதுமை பருப்பில் காணப்படுகின்றன. என்றும் இளமையாக இருக்க விரும்புபவர்கள் வாதுமை பருப்பை கண்டிப்பாக சாப்பிட வேண்டும். இது ஒரு சிறந்த ஆண்டி- ஏஜிங் உணவு. வாதுமை பருப்பு, ஆரோக்கியமான, பளபளப்பான சருமத்தை தருகிறது. இதில் உள்ள ஆரோக்கிய கொழுப்புகள் சரும் சுருக்கங்களை நீக்குகிறது.
பாதாம் மற்றும் முந்திரி பருப்புகளை பலர் சாப்பிடுவார்கள். ஆனால், வாதுமை பருப்பிற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. வாதுமை பருப்பை சரியான முறையில் சாப்பிட்டால், உங்களால் நினைத்துக்கூட பார்க்க முடியாத பலன்கள் கிடைக்கும். வாதுமை பருப்பினால் கிடைக்கும் பிற நன்மைகள் குறித்தும், அதனை சாப்பிடும் சரியான முறை குறித்தும் அறிந்து கொள்ளலாம்.
மத்திய தரைக்கடல் உணவில் அதிகமாக பயன்படுத்தப்படும், வாதுமை பருப்பு, இதயத்திற்கு நல்லது என்று கருதப்படுகிறது. இதனால் இதயத்தின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதோடு, அது தொடர்பான நோய்களும் ஆண்டாது என்கின்றனர் நிபுணர்கள். மூளை மிக வேகமாக வேலை செய்யும். சர்க்கரை நோய், புற்றுநோய் ஆகியவையும் அண்டாது.
மூளை கூர்மை
வாதுமை பருப்பு மூளையை கூர்மையாக்க பயனுள்ளதாக இருக்கும். இது மூளை உணவு என்று அழைக்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இதய ஆரோக்கியம்
வாதுமை பருப்பில் உள்ள நல்ல கொழுப்புகள் இதயத்திற்கு நல்லது மற்றும் ஆரோக்கியமானது. தற்போது இளைஞர்களுக்கும் மாரடைப்பு ஏற்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், இந்த உணவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
சரும ஆரோக்கியம்
முதுமையை தடுத்து நிறுத்தும் ஆற்றல் வாதுமை பருப்பில் மறைந்துள்ளது. சருமத்தை இளமையாக வைத்திருக்கும். ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஈ சருமத்தை சுருக்கங்களில் இருந்து பாதுகாக்கிறது.
கூந்தல் ஆரோக்கியம்
முடி உதிர்தலை தடுக்கவும், முடி வளர்ச்சியை பெறவும் இந்த உலர் பழத்தை சாப்பிட வேண்டும். இது முடியின் வேர்களை வலுப்படுத்தும். இதனால் வழுக்கையையும் தடுக்கலாம்.
மேலும் படிக்க | பிளாக் காபியின் 6 ஆரோக்கிய நன்மைகள் - காலையில் அதை ஏன் சாப்பிடுவது நல்லது?
நோய் எதிர்ப்பு சக்தி
வாதுமை பருப்பில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளதால், நோய்கள் வராமல் பாதுகாக்கிறது. மேலும் தேனுடன் சாப்பிட்டால் ஆற்றல் அதிகரிக்கும். உங்கள் உடல்நிலை சீராக இருக்கும், நீங்கள் சோர்வடைய மாட்டீர்கள்.
வாதுமை பருப்பு சாப்பிட சரியான வழிகள்
1. இரவு முழுவதும் 3 - 4 வாதுமை பருப்புகளை ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள். ஊற வைப்பதால், அதன் ஊட்டச்சத்து இரட்டிபாகிறது. அதோடு ஜீரணிக்க எளிதாகிறது.
2. வாதுமை பருப்பை ஸ்மூத்திகள், சாலட்கள் மற்றும் ஓட்ஸ் கஞ்சி, ராகி க்ஞ்சி ஆகியவற்றில் சேர்த்து சாப்பிடுங்கள்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | காலையில் பிளாக் காபி குடித்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ