Health Benefits of Ginger: நமது சமையலறைகளில் பல வித உணவுகளில் பயன்படுத்தப்படும் இஞ்சி ஆரோக்கிய நன்மைகள் பலவற்றை உள்ளடக்கிய களஞ்சியமாகும். இது உணவில் மசாலாப் பொருளாக மட்டுமல்லாமல், தேநீர், கஷாயம் ஆகியவற்றில் சேர்க்கப்படுவதுடன் ஆயுர்வேத மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. இது ஆரோக்கியமான மற்றும் நல்ல என்சைம்களைக் கொண்டுள்ளது. மேலும் இது உடலில் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.
இஞ்சியில் அதிகமாக உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலில் உள்ள வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன. இஞ்சியில் கார்போஹைட்ரேட், புரதச்சத்து, வைட்டமின் சி, கால்சியம், மெக்னீசியம், இரும்புச்சத்து மற்றும் துத்தநாகம் போன்ற தனிமங்கள் உள்ளன. இஞ்சியை தொடர்ந்து 14 நாட்களுக்கு உட்கொண்டால், அது உடலில் சில அதிசய விளைவுகளை ஏற்படுத்தும். அந்த நன்மைகளை பற்றி இங்கே அறிந்து கொள்ளலாம்.
இஞ்சியின் வியக்க்கவைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
செரிமானம்
செரிமானத்தை சீராக்க இஞ்சி உதவும். இஞ்சியை தொடர்ந்து 14 நாட்கள் சாப்பிடுவதால் செரிமானம் மேம்படும். இஞ்சி இரைப்பை அமிலத்தை கட்டுப்படுத்தி, குடல் தசைகளை செயல்படுத்துகிறது. இதன் காரணமாக நமது உணவு சரியாக செரிக்கப்படுகிறது. தொடர்ந்து 14 நாட்களுக்கு இஞ்சி சாப்பிடுவது வயிற்று வலி, வீக்கம் மற்றும் அஜீரணத்தை குறைக்கும்.
வீக்கத்தைக் குறைக்கும்
இஞ்சியில் ஜிஞ்சரால் எனப்படும் ஒரு உறுப்பு உள்ளது. இது உடலில் உள்ள அழற்சி பாக்டீரியாவைக் கொல்ல உதவுகிறது. இஞ்சியில் ஏராளமான அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. ஆகையால், இது வீக்கம் போன்ற பிரச்சனைகளில் நன்மை பயக்கும்.
இரைப்பை இயக்கம்
இரைப்பை இயக்கம் வயிற்றில் உள்ள செயல்பாடு தொடர்பானது. இதில் உணவு செரிமானம் எந்த வேகத்தில் நடக்கிறது என்பது மிக முக்கியம். தினமும் 14 நாட்களுக்கு இஞ்சி சாப்பிடுவது செரிமானத்தை மேம்படுத்தி வயிற்று புண்கள் அல்லது கட்டிகளின் அபாயத்தையும் குறைக்கிறது. இஞ்சி சாப்பிடுவது குடல் இயக்கத்திற்கும் உதவுகிறது.
ஆண்டி-ஆக்சிடெண்டுகள்
இஞ்சியில் ஆரோக்கியமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது உடலில் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. தொடர்ந்து 14 நாட்களுக்கு இஞ்சியை உட்கொள்வதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படுகிறது. இதன் மூலம் சளி, இருமல் மற்றும் வைரஸ் நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள ஆற்றல் கிடைக்கிறது.
கெட்ட கொலஸ்ட்ரால்
கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் கண்டிப்பாக 14 நாட்கள் இஞ்சியை சாப்பிட வேண்டும். இதன் மூலம் அவர்களின் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரைந்து வெளியேறும். இஞ்சி சாப்பிடுவது மாரடைப்பு அபாயத்தையும் குறைக்கும். எனினும், இரத்தத்தை மெலிக்கும் மருந்துகளை எடுத்துக்கொள்பவர்கள் முதலில் தங்கள் மருத்துவரை அணுகவும். அதன் பிறகுதான் இஞ்சியை உட்கொள்ள வேண்டும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | எச்சரிக்கை... இந்த பிரச்சனைகள் இருந்தால் மஞ்சள் பால் குடிப்பதை தவிர்ப்பது நல்லது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ