Home remedies for back pain | இன்றைய வாழ்க்கை முறையால் முதுகுவலி என்பது ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. இது எந்தப் பருவத்திலும் உங்களைத் தொந்தரவு செய்யும். முதுகுவலிக்கு பல காரணங்கள் இருக்கலாம், உட்கார்ந்து வேலை செய்வது, நீண்ட நேரம் ஒரே நிலையில் இருப்பது அல்லது தவறான வழியில் தூங்குவது என சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் நாம் சில விஷயங்களைக் கவனித்து அதனை பின்பற்றும்போது இந்தப் பிரச்னை வராது. முதுகுவலியிலிருந்து விடுபட எளிமையான வீட்டு வைத்தியங்களே இருக்கின்றன. அவை என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
முதுகு வலியைப் போக்க வழிகள்
1. சுடு தண்ணீர் ஒத்தணம்
சுடு தண்ணீர் ஒத்தணம் கேள்விபட்டிருக்கிறீர்களா?. ஒரு பையில் சுடு தண்ணீரை நிரப்பி, அந்த பையை வலி உள்ள இடத்தில் வைத்து 15-20 நிமிடங்கள் வைத்திருக்கவும். அந்த சூடு முதுகு வலிக்கு ஒத்தணமாகவும், நிவாரணமாகவும் அமையும். இதன் மூலம் முதுகுவலி எளிதில் குணமாகும். ஒத்தணம் வைக்கும்போதே நீங்கள் ரிலாக்ஸாக உணருவீர்கள்.
2. உடற்பயிற்சி
முதுகுவலியைக் குறைக்க நீங்கள் பயிற்சிகள் செய்யலாம். இது ஒரு சிறந்த வழியும் கூட. தினமும் காலை மாலை என முதுகு வலியை போக்கும் பயிற்சிகளை தேர்வு செய்து செய்ய வேண்டும். சரி வர தொடர்ச்சியாக நீங்கள் பின்பற்றி வந்தால் நிச்சயம் முதுகு வலிக்கு மருந்து மாத்திரைகள் எடுக்காமலேயே நிவாரணம் பெற முடியும். கீழே குனிந்து நிமிர்வது, ஸ்கிப்பிங் ஆடுவது போன்ற பயிற்சிகள் கூட முதுகுவலிக்கு நிவாரணம் கொடுக்கும்.
3. உணவுமுறை
வலியின் போது, திராட்சை, மாம்பழம், மாதுளை, சுரைக்காய் மற்றும் வெள்ளரிக்காய் போன்ற பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவது நன்மை பயக்கும், ஏனெனில் அவற்றில் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன, அவை வலியைக் குறைக்க உதவும்.
4. சரியான தோரணை
நாம் தூங்கினால், நடந்தால் அல்லது தவறான தோரணையில் உட்கார்ந்தால், அது முதுகுவலியை அதிகரிக்கிறது. தூங்கும் போது பக்கவாட்டில் திரும்பவும், நாற்காலியில் நேராக அமர்ந்து வேலை செய்யவும், உடலை நேராக வைத்து நடக்கவும். இந்த முதுகு வலி குறையும்.
5. யோகா
யோகா மூலம் உடல் மற்றும் மனதின் பல பிரச்சனைகளை சமாளிக்க முடியும். நீங்கள் ஒரு நல்ல யோகா பயிற்றுநரை சந்தித்து முதுகுவலியைப் போக்க ஆசனங்களைக் கேட்டு அவரைப் பின்பற்ற வேண்டும். தினசரி காலை மாலை யோகா செய்யும்போது முதுகு வலி நிச்சயம் குறைந்துவிடும். இருந்தும் உங்களால் வலியை பொறுக்க முடியாத அளவுக்கு இருந்தால் நிச்சயம் மருத்துவரை சந்திப்பதே சிறந்த வழியாகும். நீங்களாக எந்தவொரு முன்முடிவும் எடுப்பதற்கு முன்பு மருத்துவரை சந்தித்து ஆலசோனை பெற்ற பிறகு இந்த பயிற்சிகளை பின்பற்றுவது சிறந்ததாகும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | குடல் பிரச்சனை தீர்வு! இந்த 3 உணவுகள் சாபிட்டால் மலச்சிக்கல், வாயு இருக்காது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ