Rahul Gandhi Stocks Mutual Fund Investment: நாடாளுமன்ற தேர்தல் பரப்புரை தற்போது சூடுபிடித்துள்ளது. மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஏப். 19ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், ஜூன் 1ஆம் தேதி கடைசி கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் வரும் ஜூன் 4ஆம் தேதி வெளியாகும். குறிப்பாக, முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துவிட்டது. தேர்தல் பரப்புரை களம் பரபரப்பாக காணப்படுகிறது.
ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க கடும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது எனலாம். பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் நட்டா, மத்திய அமைச்சர்கள் பல்வேறு மாநிலங்களில் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். மறுபுறம் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியும் பாஜகவுக்கு இணையாக தங்களின் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
காங்கிரஸின் தேர்தல் அறிக்கை
பாஜக வென்றால் இம்முறையும் மோடியே பிரதமராக பொறுப்பேற்பார் என கூறப்படும் நிலையில், காங்கிரஸ் பிரதமர் வேட்பாளர் என்று யாரையும் அறிவிக்கவில்லை. காங்கிரஸ் தற்போது தேர்தல் அறிக்கையை அறிவித்துள்ள நிலையில், பாஜக இன்னும் தேர்தல் அறிக்கையை அறிவிக்கவில்லை. காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் கல்வி கடன் ரத்து, மகளிருக்கு ஓராண்டு ரூ.1 லட்சம் உள்ளிட்ட எக்கச்சக்க வாக்குறுதிகளை வழங்கியுள்ளனர். இதனால் பாஜகவின் தேர்தல் அறிக்கையின் மீது எதிர்பார்ப்பு உள்ளது. பாஜக முன்னணி தலைவர்கள் அதன் தேர்தல் அறிக்கையில் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை ராகுல் காந்தி மீதான மக்கள் செல்வாக்கு பெரிய ஊக்கத்தை அளித்துள்ளது. கடந்த தேர்தலை போலவே ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் கடந்த ஏப். 3ஆம் தேதி வயநாடு தொகுதியில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
ராகுல் காந்தியின் முதலீடுகள்
ராகுல் காந்தி 2014ஆம் ஆண்டில் உத்தர பிரதேசத்தின் அமேதி தொகுதியில் போட்டியிட்டு வென்றார். தொடர்ந்து, 2019இல் அமேதி மற்றும் வயநாடு தொகுதிகளில் போட்டியிட்டு, அமேதியில் தோல்வியுற்றார். தற்போது கேரளாவில் வரும் ஏப். 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அங்கு ராகுல் காந்தியை எதிர்த்து இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற சிபிஎம் கட்சி வேட்பாளரும் போட்டியிடுகிறார். பாஜகவும் போட்டியிடுகிறது.
இந்நிலையில், ராகுல் காந்தியின் வேட்புமனுவில் அவரின் முதலீடுகள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர் ITC, ICICI வங்கி, சுப்ரஜித் இன்ஜினியரிங் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளை வைத்துள்ளார். இதில் சுப்ரஜித் இன்ஜினியரிங் நிறுவனத்தின் 4,068 பங்குகளை அவர் வைத்துள்ளார், அதன் மதிப்பு தற்போது 16.65 லட்சம் ஆகும். மேலும், ITC நிறுவனத்தின் 3,039 பங்குகளை வைத்துள்ளார், அதன் மதிப்பு ரூ. 12.96 லட்சம் மற்றும் ICICI நிறுவனத்தின் 2,299 பங்குகளை அவர் வைத்துள்ளார், அதன் மதிப்பு ரூ. 24.83 லட்சம் ஆகும்.
மற்ற முதலீடுகள்
திவிஸ் லேபாரடரிஸ் (Divi’s Laboratories), அல்கலைல் அமைன்ஸ் (Alkyl Amines), பஜாஜ் பைனான்ஸ் (Bajaj Finance), தீபக் நைட்ரேட் (Deepak Nitrite), ஏசியன் பெயின்ட்ஸ் (Asian Paints), இன்ஃபோஸிஸ் (Infosys), பிரிட்டானியா இன்டஸ்டீரிஸ் (Britannia Industries), டைட்டன் கம்பெனி (Titan Company), டாடா கன்ஸல்டன்ஸி சர்வீஸ் (Tata Consultancy Services) ஆகிய நிறுவனங்களின் பங்குகளையும் அவர் வைத்துள்ளார்.
குறிப்பாக, இவரிடம் பிடிலைட் நிறுவனத்தின் 1,474 பங்குகள் உள்ளன. இதன் மதிப்பு ரூ.43.27 லட்சமாகும். பஜாஜ் நிறுவனத்தின் 551 பங்குகளை வைத்துள்ளார் ராகுல் காந்தி. அதன் மதிப்பு ரூ.35.89 லட்சமாகும். அதேபோல், ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனத்தின் 1,231 பங்குகளை வைத்துள்ளார், அதன் மதிப்பு ரூ.35.29 லட்சமாகும். இவை அனைத்தும் மார்ச் 15ஆம் தேதி அன்றைய மதிப்பின் அடிப்படையானது. இவை மட்டுமின்றி, HDFC small cap Reg-G, ICICI Prudential Reg Savings-G, PPFAS FCF D Growth, and HDFC MCOP DP GR ஆகிய மியூச்சுவல் ஃபண்டிலும் முதலீடு செய்துள்ளார். மேலும், ரூ.15.21 லட்சம் மதிப்பில் தங்கப் பத்திரங்களிலும் முதலீடு செய்திருக்கிறார். டெல்லி, குருகிராம் பகுதியில் நிலத்தையும் இவர் முதலீடு செய்துள்ளார்.
மேலும் படிக்க | தில்லியின் அடுத்த முதல்வர் யார்... ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் பரபரப்பு தகவல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ