'Made in India' திட்டத்தின் கீழ் PM CARES நிதியிலிருந்து 50,000 வென்டிலேட்டர்கள் தயாரிப்பு..!

PM CARES நிதியின் மூலம் 50000 வென்டிலேட்டர்கள் தயாரிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளுக்கு வழங்க உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது...!

Last Updated : Jun 23, 2020, 03:40 PM IST
'Made in India' திட்டத்தின் கீழ் PM CARES நிதியிலிருந்து 50,000 வென்டிலேட்டர்கள் தயாரிப்பு..! title=

PM CARES நிதியின் மூலம் 50000 வென்டிலேட்டர்கள் தயாரிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளுக்கு வழங்க உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது...!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது இன்று காலை நிலவரப்படி இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,40,215 உயர்ந்துள்ளது என்பதும், அதேபோல் கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 14,011 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கொரோனா பரவுவதை இந்தியாவில் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க இந்தியாவிலேயே வென்டிலேட்டர் தயாரிக்கப்பட உள்ளதாக பிரதமர் அலுவலகத்தில் இருந்து தகவல்கள் தெரிவித்துள்ளது. 

இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு மருத்துவமனைகளின் கொரோனா சிறப்பு பிரிவுகளுக்கு சப்ளை செய்வதற்காக, PM PM CARES நிதியில் இருந்து இந்தியாவிலேயே 50000 வென்டிலேட்டர் தயாரிக்கப்படுகின்றன. இதற்காக 2000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. PM CARES நிதியில் இருந்து இதுவரை 2923 வென்டிலேட்டர்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில், 1340 வென்டிலேட்டர்கள் ஏற்கனவே மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு சப்ளை செய்யப்பட்டுள்ளன. 

READ | கொரோனா-வை குணப்படுத்தும் ஆயுர்வேத மருந்தை அறிமுகம் செய்தது பதாஞ்சலி!

புலம் பெயர் தொழிலாளர்களின் நலனுக்காக PM CARES நிதியிலிருந்து ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 2923 வென்டிலேட்டர்கள் தயாரிக்கப்பட்டுள்ளன, அவற்றில் 1340 வென்டிலேட்டர்கள் ஏற்கனவே மாநிலங்கள் / யூ.டி.க்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிரா (275), டெல்லி  (275), குஜராத் (175), பீகார் (100), கர்நாடகா (90), ராஜஸ்தான் (75) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் இறுதிக்குள் 14,000 வென்டிலேட்டர்கள் மாநிலங்கள் / யூ.டி.க்களுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், PM CARES நிதியிலிருந்து புலம் பெயர் தொழிலாளர்கள் நலனுக்காக தமிழ்நாட்டுக்காக ரூ.83 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனைபோல், மகாராஷ்டிரா ரூ.181 கோடி உத்திரப்பிரதேசம் ரூ.103 கோடி, குஜராத் ரூ.66 கோடி, டெல்லி ரூ.55 கோடி, மேற்கு வங்கம் ரூ.53  கோடி, பீகார் ரூ.51 கோடி, மத்திய பிரதேசம் ரூ.50 கோடி, ராஜஸ்தான் ரூ.50 கோடி, கர்நாடகா ரூ.34 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கில் கொண்டு 50% நிதியும், கொரோனா பாதிப்பு அதிகம் கணக்கில் கொண்டும் 40% நிதியும், அனைத்து மாநில அரசுகளுக்கும் 10% நிதி வழங்கப்படும் என்று பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. PM CARES எவ்வளவு வசூலானது போன்ற விவரத்தை வெளியிட மறுத்த நிலையில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 

Trending News