டெல்லி அமைச்சரவை வீட்டு வாசலில் ரேஷன் வழங்க ஒப்புதல் அளிக்கிறது என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்..!
நாடு முழுவ்தும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. இதற்கிடையில், வீட்டிற்கு வழங்கப்படும் ரேஷன் விநியோகத்திற்காக 'வீட்டுவாசலில் ரேஷன்' (Ration) என்ற திட்டத்திற்கு டெல்லி அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஏழை மக்களின் வீடுகளுக்கு அரசாங்கம் ரேஷன் வழங்கும். என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் (Arvind Kejriwal) செவ்வாயன்று செய்தியாளர் கூட்டத்தில் இந்த தகவலை பகிர்ந்து கொண்டார்.
இந்த திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம், மக்கள் இனி ரேஷன் கடைக்கு வர வேண்டியதில்லை. டெல்லியில் 72 லட்சத்துக்கும் அதிகமானோர் ஒவ்வொரு மாதமும் ரேஷன் பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read | 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு... 25,000 விவசாயிகளுக்கு பயனளிக்கும் அரசின் புதிய திட்டம்!!
இந்த திட்டத்தை அமல்படுத்திய பின்னர் ரேஷன் மக்களின் வீட்டிற்கு அனுப்பப்படும், அவர்கள் ரேஷன் கடைக்கு வர வேண்டியதில்லை என்று கெஜ்ரிவால் கூறினார். இது ஒரு புரட்சிகர நடவடிக்கை என்று வர்ணிக்கும் கெஜ்ரிவால் தனது மக்களின் வீட்டு வாசலில் ரேஷன் பொருட்களை வழங்க வேண்டும் என்பது எனது நீண்ட கால கனவு எனவும் குறிப்பிட்டுள்ளார். இப்போது அந்த கனவு நனவாகிறது. டெல்லி அரசாங்கத்தின் 'முக்தார் கர்-கர் ரேஷன்' திட்டம் தொடங்கும் அதே நாளில் டெல்லியில் அரசாங்கத்தின் ஒன் நேஷன் ஒன் ரேஷன் கார்டு செயல்படுத்தப்படும் என்று கெஜ்ரிவால் கூறினார்.
டெல்லிவாசிகள் ரேஷன் கடைக்குச் செல்லலாமா அல்லது வீட்டு ரேஷன் எடுக்கலாமா என்ற தேர்வு முறையும் வழங்கப்படும். ஹோம் டெலிவரி கீழ், கோதுமைக்கு பதிலாக கோதுமை மாவு வழங்கப்படும். இந்த திட்டம் 6-7 மாதங்களில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.