புதுடெல்லி: அடையாளம் தெரியாத மர்ம கும்பலால் சிவில் ஏஜென்சியின் ஊழியர் ஒருவர் தாக்கப்பட்ட போது, அவரது நாய் குட்டி அவரை காப்பாற்றிய சம்பவம் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது!
பாதிக்கப்பட்டவர் ராகேஷ் (58) என அடையாளம் காணப்பட்டார், சம்பவத்தன்று மாலை தனது நாய் டைசனுடன் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத 4 பேர் கத்தியுடன் அவரை தாக்க முயற்சித்துள்ளனர்.
அப்போது மைக் டைசன் அவர்கள் மீது பாய்ந்து கொடூரமாக தாக்கியதில் மர்ம நபர்கள் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து நடந்த போராட்டத்திற்கு இடையில், ராகேஷின் குடும்ப உறுப்பினர்கள் வீட்டிற்கு வெளியே வந்தனர். பின்னர் அக்கும்பல் அங்கிருந்து தப்பித்து ஓடினர்.
ராகேஷ் மற்றும் அவரது நாய் குட்டியும் தற்போது மருத்துவ கவனிப்பில் உள்ளனர்.
இச்சம்பவத்தில் ஈடுப்பட்ட மர்ம கும்பளினை காவல்துறையினர் தேடி வருகின்றனர்!