இந்திய தேர்தல் ஆணையத்தில் புதிய ஆணையர்களாக சுக்பீர் சந்த, ஞானேஷ் குமார் தேர்வு

Sukhbir Sandhu & Gyanesh Kumar: விரைவில் மக்களவைத் தேர்தல் 2024 அறிவிக்கப்படவுள்ள நிலையில், புதிய ஆணையர்களாக ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Written by - Shiva Murugesan | Last Updated : Mar 14, 2024, 02:43 PM IST
இந்திய தேர்தல் ஆணையத்தில் புதிய ஆணையர்களாக சுக்பீர் சந்த, ஞானேஷ் குமார் தேர்வு title=

Election Commission Of India: இந்திய தேர்தல் ஆணையத்தின் உயர்மட்ட குழுவில் காலியாக உள்ள இரண்டு பதவிகளுக்கு சுக்பீர் சிங் சந்து மற்றும் ஞானேஷ் குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று மக்களவையில் காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இன்று பிற்பகல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தேர்தல் ஆணையம் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்குத் தயாராகி வரும் நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு பக்கபலமாக இருக்க இரண்டு தேர்தல் ஆணையர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான குழுவில் காங்கிரஸ் கட்சியை சேர்த்த சௌத்ரி ஒருவராக இருந்தார். 

பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தவிர, மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் மேக்வாலும் இந்த ஆலோசனை குழுவில் கலந்து கொண்டார்.

மேலும் படிக்க - Nari Nyay Guarantee: ஏழை குடும்ப பெண்ணுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை சாத்தியமா?

எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆதங்கம்

இந்திய தலைமை நீதிபதிக்கு பதிலாக மத்திய அமைச்சரை தேர்வுக் குழுவில் சேர்க்கும் வகை செய்யும் சட்டம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மத்திய அரசை கடுமையாக சாடினார். 

அவர் கூறுகையில், "இந்தக் குழுவில் இந்தியத் தலைமை நீதிபதி இருந்திருக்க வேண்டும்' என்று கூறிய அவர், கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தின் கீழ், இன்று கூட்டப்பட்ட கூட்டம் வெறும் “சம்பிரதாயமாக” இருந்தது. இந்த குழுவில் மத்திய அரசுக்கு பெரும்பான்மை இருப்பதால், அவர்கள் விரும்புவது தான் நடக்க்கிறது' என்றார்.

மேலும் அவர் கூறுகையில், 'நேற்றிரவு பரிசீலனை செய்ய 212 பெயர்கள் தன்னிடம் வழங்கப்பட்டதாக கூறினார். ஆணையர்களை பரிசீலனை ஒரு குறுகிய பட்டியலைக் கேட்டேன். ஆனால் எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. நான் நள்ளிரவில் டெல்லியை அடைந்தேன், இன்று மதியம் கூட்டம் நடந்தது. எனக்கு 212 பெயர்கள் கொண்ட பட்டியல் வழங்கப்பட்டன, ஒருவரால் எப்படி இவ்வளவு பேரின் பெயர்களை பரிசோதிக்க முடியும்? அதுவும் ஒரு நாளில்? பிறகு, இந்த கூட்டம் கூடுவதற்கு முன் எனக்கு 6 பெயர்கள் கொண்ட பட்டியல் கொடுக்கப்பட்டன. ஆனால் பெரும்பான்மை அவர்களிடம் இருப்பதால், அவர்கள் விரும்பிய ஆணையர்களை தேர்ந்தெடுத்தனர்" என்று அவர் கூறினார்.

மேலும் படிக்க - 'அரசியலமைப்புக்கு எதிரானது...' தேர்தல் பத்திரங்கள் ரத்து - உச்ச நீதிமன்றம் அதிரடி

யார் இந்த சுக்பீர் சிங் சாந்து ஐஏஎஸ்?

சுக்பீர் சிங் சாந்து மற்றும் ஞானேஷ் குமார் ஆகியோர் 1988-ம் ஆண்டு பேட்ச்சைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள். 

சுக்பீர் சிங் சாந்து ஐஏஎஸ் உத்தரகாண்ட் கேடரைச் சேர்ந்தவர். சுக்பீர் சிங் சாந் இதற்கு முன்னர் உத்தரகாண்ட் மாநிலத்தின் தலைமைச் செயலாளர் மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தலைவர் உட்பட முக்கிய அரசு பதவிகளை வகித்துள்ளார். 

யார் இந்த ஞானேஷ் குமார் ஐஏஎஸ்?

ஞானேஷ் குமார் கேரள கேடரைச் சேர்ந்தவர். ஞானேஷ் குமார் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம் மற்றும் அமித் ஷா தலைமையிலான கூட்டுறவு அமைச்சகத்தில் செயலாளராக பணியாற்றியுள்ளார்.

மேலும் படிக்க - தேர்தல் பத்திர நிதி விவகாரம்... SBI வங்கிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்குத் தாக்கல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News