சோன்பத்ரா படுகொலை: பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை சந்தித்த பிரியங்கா!!

சோன்பத்ரா துப்பாக்கிச்சூட்டில் பலியான பழங்குடியின விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்தார் பிரியங்கா காந்தி!!

Last Updated : Jul 20, 2019, 01:05 PM IST
சோன்பத்ரா படுகொலை: பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை சந்தித்த பிரியங்கா!! title=

சோன்பத்ரா துப்பாக்கிச்சூட்டில் பலியான பழங்குடியின விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்தார் பிரியங்கா காந்தி!!

கடந்த 17 ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் சோன்பத்ரா என்ற இடத்தில் ஏற்பட்ட நிலத்தகராறில் 10 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்க நேற்று அப்பகுதிக்குச் சென்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் பிரியங்கா காந்தி, சாலையில் அமர்ந்து தர்ணா தனது தொண்டர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். 

சோன்பத்ராவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்காமல் தான் திரும்ப மாட்டேன் என்று கூறி அங்கேயே இரவு முழுவதும் போராட்டம் நடத்தினார். இரவிலும் தர்ணா போராட்டம் நடந்தது. இன்று காலையும் சோன்பத்ரா செல்ல பிரியங்கா காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இந்நிலையில், கலவரத்தில் பாதிக்கப்பட்ட இருவரது உறவினர்கள் காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தியை சந்திக்க விருந்தினர் விடுதிக்கு வந்தனர். அவர்களுக்கு அவர் ஆறுதல் கூறினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பிரியங்கா காந்தி கூறுகையில்; பாதிக்கப்பட்ட 2 குடும்பங்களை மட்டுமே எனக்கு சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஏனைய 15 பேர் குடும்பங்களை சந்திக்க அனுமதி அளிக்கப்படவில்லை” என குற்றம் சாட்டினார்.

 

Trending News