7th Pay Implementation: அரசு ஊழியர்களின் நீண்டநாள் கோரிக்கைகளுள் ஒன்று, புதிய ஊதியக்குழுவான எட்டாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தாமல், அரசு பழைய நடைமுறையான ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளையே மீண்டும் செயல்பபடுத்த வேண்டும் என்பதுதான். மத்திய அரசு ஊழியர்களில் இருந்து பல்வேறு மாநிலங்களின் அரசு ஊழியர்களும் தொடர்ந்து இதனை கோரிக்கையாக முன்வைத்து வருகின்றனர்.
பல்வேறு அரசியல் கட்சிகளும் இதுசார்ந்து முடிவெடுக்கப்பட்டு, அரசு ஊழியர்களின் விருப்பத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம் என தேர்தல் வாக்குறுதியாக தெரிவித்து வந்தன. ஆனால், இதுவரை எந்தவொரு மாநிலம் அதனை செயல்படுத்தவில்லை. காங்கிரஸ் போன்ற எதிர்கட்சிகள் ஆளும் மாநிலத்தில் இதுகுறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், தற்போது பாஜக ஆளும் மாநிலங்களிலும் எட்டாவது ஊதியக்குழுவிற்கு எதிரான குரல்கள் எழத்தொடங்கியுள்ளன.
காலவரையற்ற வேலை நிறுத்தம்
அந்த வகையில், சமீபத்தில் கர்நாடகா மாநிலத்தை ஆளும் பாஜக அரசு, சட்டப்பேரவையில் வரும் நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தது. வரும் மே மாதம் கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. ஆனால், இதுவரை தேர்தல் தேதி அறவிக்கப்படவில்லை. எனவே, இந்த இடைக்கால பட்ஜெட் மீதும் பெரிதும் எதிர்பார்ப்பு இருந்தது. பல்வேறு அறிவிப்புகளுடன் ஊதியக்குழு குறித்த அறிவிப்புகளும் வரும் என கூறப்பட்டன.
மேலும் படிக்க | EPFO: ஊழியர்களுக்கு அதிக ஓய்வூதியம் கிடைக்கும்! புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு
ஆனால், அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டில் அதுகுறித்த எந்த அறிவிப்பையும் பாஜகவின் பசவராஜ் பொம்மை தலைமையிலான அரசு அறிவிக்கவில்லை. இதனால், அரசு ஊழியர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்ததாக தெரிகிறது. இந்நிலையில், கர்நாடகா அரசு ஏழாவது ஊதியக்குழுவை அமல்படுத்தக்கோரி அறிவிப்பை வெளியிடாவிட்டால், வரும் மார்ச் 1ஆம் தேதி முதல் அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக அரசு ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் சி.எஸ்.சடாக்ஷரி கூறுகையில்,"அனைத்து அரசு ஊழியர்களும் மார்ச் 1ஆம் தேதி முதல் தங்கள் பணிகளுக்கு செல்லாமல் மாநிலம் முழுவதும் போராட்டத்தை தொடங்க முடிவெடுத்துள்ளோம். அரசு ஊழியர்கள் மீது முதல்வர் பசவராஜ் பொம்மை பாராமுகம் காட்டிகிறார். முதல்வர் பொம்மையின் அணுகுமுறை ஒன்பது லட்சம் அரசு ஊழியர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த போராட்டத்தினால், அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகளில் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள். ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த அரசு இடைக்கால உத்தரவை பிறப்பித்தால்தான் போராட்டம் கைவிடப்படும். இல்லையெனில், போராட்டம் தொடரும்" என தெரிவித்தார்.
கர்நாடக அரசு ஊழியர்களின் முதன்மையான 3 கோரிக்கைகள்:
- மாநிலத்தில் ஏழாவது ஊதியக்குழு அமலாக்கம்.
- பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) அமல்படுத்த வேண்டும்.
- குறைந்தபட்சம் 40% பொருத்துதல் வசதிகளை (Fitment Facility) செயல்படுத்துதல்.
மேலும் படிக்க | வீட்டு கடன் வாங்கப்போறீங்களா? அப்போ...உங்களுக்குதான் இந்த பதிவு!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ