நாடு முழுவதும் ஜிஎஸ்டி எனும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பை கடந்த ஜூலை 1-ம் தேதி அமல்படுத்தப்பட்டது. ஜிஎஸ்டி அமல்படுத்திய பிறகு நாடு முழுவதும் 87 லட்சம் ஜிஎஸ்டி இணையத்தில் பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று ஜிஎஸ்டி தொடர்பாக டெல்லியில் அருண் ஜெட்லி கூறியது:-
ஜிஎஸ்டி வரியால் 91,000 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 92,000 கோடி ரூபாய் அதிகமாக வருவாய் கிடைத்துள்ளது.
ஆகஸ்ட் 25-ம் தேதி வரை 59.57 லட்சம் பேர் வருமான வரி தாக்கல் செய்துள்ளனர். வரி செலுத்தியோரின் எண்ணிக்கை தற்போது 38 புள்ளி 38 லட்சத்தில் இருந்து 59 புள்ளி 57 லட்சமாக உயர்ந்துள்ளது.
வருமான வரி செலுத்த ஜிஎஸ்டி-யில் பதிவு செய்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 72.33 லட்சம் பேர் உள்ளனர். ஜூலை மாதம் மட்டும் சுமார் 92,283 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.