தமிழகம் உட்பட இந்த மாநிலங்களில் கன மழைக்கான வாய்ப்பு: IMD

அடுத்த 5 நாட்களுக்கு கடலோர மற்றும் தெற்கு உள் கர்நாடகம், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் மற்றும் கடலோர ஆந்திரப் பிரதேசம் மற்றும் ராயலசீமாவில் பல இடங்களில் மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும் என்று IMD தெரிவித்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 17, 2021, 07:38 AM IST
தமிழகம் உட்பட இந்த மாநிலங்களில் கன மழைக்கான வாய்ப்பு: IMD title=

அடுத்த இரண்டு நாட்களுக்கு, இந்தியாவின் ஏழு, எட்டு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் பல பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.

அந்தமான் & நிக்கோபார் தீவுகள், கடலோர மற்றும் தெற்கு கர்நாடகா, வடக்கு கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி, தென் கடலோர ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இன்றும் (நவம்பர் 17) நாளையும் (நவம்பர் 18) பல இடங்களில் மழை (Rain) பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 16 தேதியிட்ட செய்திக்குறிப்பில், அடுத்த 5 நாட்களுக்கு கடலோர மற்றும் தெற்கு உள் கர்நாடகம், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் மற்றும் கடலோர ஆந்திரப் பிரதேசம் மற்றும் ராயலசீமாவில் பல இடங்களில் மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும் என்று IMD தெரிவித்துள்ளது. ராயலசீமாவில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு உள்ளது.

நவம்பர் 17 ஆம் தேதி (இன்று) தமிழ்நாடு (Tamil Nadu), புதுச்சேரி மற்றும் காரைக்கால் மற்றும் கடலோர ஆந்திரப் பிரதேசத்தில் பரவலான கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

ALSO READ: வானிலை தகவல்: மீண்டும் சென்னையில் கனமழை தொடங்குமா..!! 

நவம்பர் 18 ஆம் தேதி வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் மற்றும் தெற்கு கடலோர ஆந்திரப் பிரதேசத்தில் கன மழை முதல் மிக கனமழை வரை பெய்யும்.

வடக்கு மற்றும் தெற்கு கோவாவில், பல இடங்களில் மின்னலுடன் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நவம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தென்மேற்கு வங்கக் கடலில், தெற்கு ஆந்திரப் பிரதேசம்-வடக்கு தமிழகக் கடற்கரையோரங்களில் பலத்த காற்று (மணிக்கு 40-50 கிமீ வேகம், மணிக்கு 60 கிமீ வேக வரை செல்லக்கூடும்) வீசக்கூடும்.

17 ஆம் தேதி (இன்று) மகாராஷ்டிரா கடற்கரையை ஒட்டி கிழக்கு மத்திய அரபிக்கடலில் காற்றின் வேகம் மிக அதிகமாக இருக்கலாம். 18 ஆம் தேதி (வியழன்) கிழக்கு மத்திய அரபிக்கடலுக்கு மேலும், 19 நவம்பர் 2021 அன்று மத்திய மற்றும் அதை ஒட்டிய வடக்கு அரபிக்கடலுக்கு மேலும் பலத்த காற்று வீசும்.

மீன்வர்களுக்கான (Fishermen) எச்சரிக்கையையும் வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என கணிக்கபட்டுள்ள பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என IMD எச்சரிக்கை விடுத்துள்ளது.

ALSO READ: வானிலை தகவல்: இப்பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News