ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் நடந்த என்கவுன்டரில் 5 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். ரஜோரி மாவட்டத்தின் பிர்-பஞ்சால் பகுதியில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடந்து வரும் நடவடிக்கையில் 4 ஜவான்கள் மற்றும் ஒரு JCO (ஜூனியர் கமிஷன்ட் ஆபீசர்) ஆகியோர் வீரமரணம் அடைந்தனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீவிரவாதிகளுக்கு எதிரான தொடர் நடவடிக்கை
ஜம்மு -காஷ்மீரில், இந்திய ராணுவ வீரர்கள் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகின்றனர். சில பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தக்வல் கிடைத்த நிலையில், இந்திய ராணுவம் நடவடிக்கையை தொடங்கியது. அதன் பிறகு பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதை தொடர்ந்து என்கவுன்டர் தொடங்கியது. பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது.
ALSO READ | நிலக்கரி பற்றாக்குறை: இந்தியாவும் ‘இருளில்’ மூழ்குமா... மத்திய அரசு கூறுவது என்ன..!!
சம்பவ இடத்திற்கு சென்றுள்ள கூடுதல் படைகள்
கட்டுப்பாட்டு கோட்டைக் கடந்து கனரக ஆயுதங்களுடன் பயங்கரவாதிகள் காட்டுக்குள் பதுங்கியிருப்பதாக உளவு தகவல்கள் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். பயங்கரவாதிகள் தப்பிச் செல்லாத வகையில், சம்பவ இடத்திற்கு கூடுதல் படைகள் அனுப்பப்பட்டுள்ளன.
அனந்தநாகில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டார்
ஜம்மு -காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நேற்றிரவு மோதல் தொடங்கியது, ராணுவ வீரர்கள் 1 பயங்கரவாதியை சுட்டுக் கொன்றனர். என்கவுன்டரில் ஒரு போலீஸ்காரரும் காயமடைந்ததாக காஷ்மீர் மண்டல போலீசார் தெரிவித்தனர். உளவு தகவலின் அடிப்படையில், சந்தேகத்திற்கிடமான இடத்தை நோக்கி போலீஸ் குழு சென்றபோது, மறைந்திருந்த தீவிரவாதிகள் போலீஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். துப்பாக்கிச் சூட்டின் போது, அடையாளம் தெரியாத ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டார்.
பந்திபோராவில் ஒரு பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் கொன்றனர்
இது தவிர, ஜம்மு -காஷ்மீரின் பந்திபோராவில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே என்கவுன்டர் நடந்து வருகிறது. ராணுவ வீரர்கள் ஒரு பயங்கரவாதியைக் கொன்றனர். இரண்டு முதல் மூன்று பயங்கரவாதிகள் அந்த பகுதியில் பதுங்கியிருப்பதாக சந்தேகிக்கப்படுவதாகவும், எனினும் நடவடிக்கை நிறைவடைந்த முடிந்த பிறகு உண்மையான எண்ணிக்கையை சொல்ல முடியும் என்றும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இப்பகுதியில் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
NIA 5 பயங்கரவாதிகளை கைது செய்தது
ஜம்மு -காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராக தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது மற்றும் இதுவரை 5 பயங்கரவாதிகளை கைது செய்துள்ளது. ISIS தீவிரவாதிகள் மற்றும் DRF பயங்கரவாதிகள் 3 பேரை NIA கைது செய்துள்ளது. காஷ்மீரில் 8 இடங்களில் NIA சோதனை நடத்தியது. அதன் மூலம் ஐஎஸ்எஸ் பயங்கரவாதிகளிடமிருந்து பல ஆவணங்கள் கண்டறியப்பட்டன.
ALSO READ | Amit Shah Interview: ஆட்சியில் நீடிப்பது குறிக்கோள் அல்ல – அமித் ஷா
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR