காங்கிரஸ் எம்பி.,யும், முன்னாள் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி இன்று ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி நிகழ்வில் கலந்துகொண்டார். அந்த விழாவில், அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட்டும் பங்கேற்றார்.
அப்போது, ராகுல் காந்தி முன்னிலையில் பாஜகவை தாக்கி பேசி வந்த அசோக் கெலாட் அந்த முக்கிய அறிவிப்பையும் அறிவித்தார். அதாவது, ஆண்டு முழுவதும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்திற்கு ஆண்டுக்கு வழங்கப்படும் 12 சிலிண்டர்களின் விலை பாதியாக குறைக்கப்படும் என அறிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,"அடுத்த மாதம் பட்ஜெட்டுக்கு தயாராகி வருகிறேன். இப்போது ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். உஜ்வாலா திட்டத்தின் கீழ் பிரதமர் நரேந்திர மோடி ஏழைகளுக்கு எல்பிஜி இணைப்புகளை வழங்கினார்.
மேலும் படிக்க | காணாமல் போன 2000... ஜனவரி 1இல் மீண்டும் வருகிறதா 1000 ரூபாய் நோட்டு!
ஆனால் சிலிண்டர் விற்பனை காலியாக உள்ளது. அதன் விலை இப்போது ரூ. 400 முதல் ரூ. 1,040 வரை உள்ளது.
ஏழைகள் மற்றும் உஜ்வாலா திட்டத்தின் கீழ் உள்ளவர்களுக்கு, ஆண்டுக்கு 12 சிலிண்டர்களை தலா 500 ரூபாய்க்கு வழங்குவோம் என்பதை இங்கு கூற விரும்புகிறேன்," என்றார்
ராஜஸ்தானில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் கட்சி தொடர்ந்து இரண்டாவது முறையாக அங்கு ஆட்சியமைக்க காத்திருக்கிறது. ஆனால், ஆட்சியை கைப்பற்றுவதை விட கட்சியையும், அதன் உட்கட்சி பூசலையும் சமாளிப்பதுதான் காங்கிரஸ் தலைமைக்கு பெரும் பிரச்னையாக உள்ளது.
இந்த மாத தொடக்கத்தில், ராகுல் காந்தி ராஜஸ்தானில் பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டார். அவர் ராஜஸ்தானுக்கு வருவதற்கு முன்னால், முதலமைச்ச் அசோக் கெலாட் தரப்புக்கும், முன்னாள் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் தரப்புக்கும் இடையே கடும் மோதல்போக்கு நிலவியது.
அரசுகள் மக்களுக்கு இலவசங்கள் அறிவிப்பது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியை நோக்கிய இலவசங்கள் மற்றும் மானியங்கள் பற்றிய விவாதத்திற்கு காங்கிரஸின் அறிவிப்பு புதிய உத்வேகத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆகஸ்ட் மாதம் நடந்த விசாரணையில், இதுகுறித்து அனைத்துக் கட்சிகளுக்கு இடையேயும் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்தது.
மேலும் படிக்க | ’இதெல்லாம் பொய்யா?’ சிபில் ஸ்கோரை சுற்றியிருக்கும் கட்டுக்கதைகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ