புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வுகளைக் காண மத்தியில் இருக்கும் தங்களது அரசாங்கம் பலகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களிடம் தெரிவித்ததாக வட்டாரங்கள் பி.டி.ஐ-யிடம் தெரிவித்தன.
பட்ஜெட் (Budget) அமர்வுக்கு முன்னதாக, வழக்கமாக அரசாங்கத்தால் கூட்டப்படும் அனைத்து தரப்பு கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மூன்று புதிய வேளான் சட்டங்களின் (Farm Laws) அமலாக்கத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கான மத்திய அரசின் முடிவு இன்னும் அப்படியேதான் உள்ளது என்று தெரிவித்தார்.
மெய்நிகர் கூட்டத்தில் தலைவர்களுக்கிடையில் உரையாற்றிய பிரதமர், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் எப்போது வேண்டுமானாலும் விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமரை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம் என்றும் இது குறித்து விவசாய தலைவர்களிடமும் கூறப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
"11 வது அரசாங்க-உழவர் சங்க பேச்சுவார்த்தையில், அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளது என்று நாங்கள் கூறியிருந்தோம். விவசாய அமைச்சருடன் எப்போது வேண்டுமானாலும் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம். நீங்கள் அழைக்கும் போதெல்லாம் அவர் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறார் என்று பிரதமர் கூறினார். இந்த நிலைமை இன்றும் பொருந்தும் என்று பிரதமர் மோடி (PM Modi) உறுதியளித்தார்” என்று மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ALSO READ: Budget 2021: இந்தியாவின் முதல் பட்ஜெட்டை வழங்கியவர் யார் என்பது உங்களுக்குத் தெரியுமா
அமெரிக்காவில் மகாத்மா காந்தி (Mahatma Gandhi) சிலை சேதப்படுத்தப்பட்டதை பிரதமர் கண்டித்துள்ளார் என்றும் அவர் கூறினார். “மகாத்மா காந்தியின் சிலை அமெரிக்காவில் (கலிபோர்னியாவில்) அழிக்கப்பட்டது. இது மிகப்பெரிய அவமானமாகும். பிரதமர் அதை கடுமையாக கண்டித்துள்ளார்” என்று ஜோஷி மேலும் கூறினார்.
அரசாங்கம் தனது சட்டமன்ற நிகழ்ச்சி நிரலை அரசியல் கட்சிகள் முன் முன்வைக்க அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்படுகிறது. பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் கூட்டத்தின் போது தாங்கள் எழுப்ப விரும்பும் பிரச்சினைகளை பற்றி பேசுகிறார்கள்.
சனிக்கிழமை நடந்த கூட்டத்தில், காங்கிரசின் (Congress) குலாம் நபி ஆசாத், திரிணாமுல் காங்கிரசின் சுதீப் பந்தோபாத்யாய், ஷிரோமணி அகாலிதளத்தைச் சேர்ந்த பல்விந்தர் சிங் புந்தேர், சிவசேனாவின் விநாயக் ரவுத் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் பிரச்சினையை எழுப்பியதாக வட்டாரங்கள் பி.டி.ஐ-யிடம் தெரிவித்தன.
ALSO READ: அமெரிக்காவில் மகாத்மா காந்தியின் சிலை சேதம் .. இந்தியர்கள் மத்தியில் கொந்தளிப்பு..!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR