முதன்முதலாக, இந்திய Navy women officers போர்க்கப்பலின் களப்பணியில்

செப்டம்பர் 21 ஆம் தேதி கொச்சியின் ஐ.என்.எஸ் கருடாவில் (INS Garuda) நடைபெற்ற விழாவில், “Observers” என்ற பிரிவில் “Wings” பட்டம் பெற்ற இந்திய கடற்படையின் 17 அதிகாரிகள் குழுவில் இரு பெண் அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 21, 2020, 05:15 PM IST
முதன்முதலாக, இந்திய Navy women officers போர்க்கப்பலின் களப்பணியில்   title=

புதுடெல்லி: செப்டம்பர் 21 ஆம் தேதி கொச்சியின் ஐ.என்.எஸ் கருடாவில் (INS Garuda) நடைபெற்ற விழாவில், “Observers” என்ற பிரிவில் “Wings” பட்டம் பெற்ற இந்திய கடற்படையின் 17 அதிகாரிகள் குழுவில் இரு பெண் அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.

இந்திய கடற்படை விமான வரலாற்றில் இரண்டு பெண் அதிகாரிகள் சப் லெப்டினன்ட் (Sub Lieutenant)   பதவியில் இருக்கும் குமுதினி தியாகி மற்றும்   ரிதி சிங் ஆகிய இருவரும் ஹெலிகாப்டர் பிரிவில் “பார்வையாளர்கள்” எனப்படும் வான்வழி தந்திரோபாயங்கள் (Airborne Tacticians)  பிரிவில்  சேர தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பெண்கள் இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.  போர்க்கப்பல்களில் இருந்து செயல்படும் வான்வழி போராளிகள் என்ற பெருமையை பெறும் இந்த இரு பெண்களும் மற்றுமொரு மைல்கல்லை உருவாக்கியிருக்கின்றனர்.  

இந்த அதிகாரிகள், சப் லெப்டினன்ட் (SLt) குமுதினி தியாகி மற்றும் எஸ்.எல்.டி ரிதி சிங் ஆகியோர் இந்திய கடற்படையின் 17 அதிகாரிகள் குழுவில் ஒரு பகுதியாக உள்ளனர். இந்தக் குழுவில் நான்கு பெண்கள்  மற்றும் இந்திய கடலோர காவல்படையின் மூன்று அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். வழக்கமான பேச்சின் (Regular batch) 13 அதிகாரிகள் மற்றும் Short Service Commissionஇன் 4 பெண் அதிகாரிகள் என மொத்தம் 14 பேர் இந்த அணியில் இடம் பெற்றிருந்தனர்.  

இந்நிகழ்ச்சியில் பேசிய ரியர் அட்மிரல் (Rear Admiral Antony) ஆண்டனி ஜார்ஜ், பட்டதாரி அதிகாரிகள் கல்வியை நிறைவு செய்யும் இந்த சந்தர்ப்பம் மிகவும் முக்கியமானது. முதன்முறையாக ஹெலிகாப்டர் நடவடிக்கைகளில் பெண்கள் பயிற்சிப் பெறவிருக்கின்றனர். இறுதியில் இந்திய கடற்படையின் போர்க்கப்பல்களில் முன்னணி வரிசையில் இவர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்று தெரிவித்தார்.  

விழாவிற்கு ரியர் அட்மிரல் ஆண்டனி ஜார்ஜ் NM, VSM,  தலைமை பணியாளர் அதிகாரி (பயிற்சி) விருதுகள் மற்றும் பட்டதாரி அதிகாரிகளுக்கு wingsகளை வழங்கினார். அதோடு, தகுதிவாய்ந்த ஊடுருவல் பயிற்றுநர்களாக (கியூஎன்ஐ) வெற்றிகரமாக பட்டம் பெற்ற மற்ற ஆறு அதிகாரிகளுக்கும் இந்நிகழ்ச்சியில் ‘Instructor Badge வழங்கப்பட்டன.

வழக்கமான பிரிவில் 91வது மற்றும் குறுகிய கால சேவையில் 22வது SSC அப்சர்வர் Observer course தற்போது முடிவடைந்துள்ளது. இதில், விமானத்தை செலுத்தல், பறக்கும் நடைமுறைகள், வான் போரில் பயன்படுத்தப்படும் தந்திரோபாயங்கள், நீர்மூழ்கி எதிர்ப்பு போர் மற்றும் வான்வழி ஏவியோனிக் அமைப்புளில் பயிற்சி பெற்றனர். இந்த அதிகாரிகள் இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படையின் கடல்சார் பணிகள் மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்பு போர் விமானங்களில் பணியாற்றுவார்கள்.

91 வது வழக்கமான அப்சர்வர் பாடநெறிப் பிரிவைச் சேர்ந்த லெப்டினன்ட் ஹிடேஷ் சிங்கிற்கு (Hitesh Singh) உத்தரபிரதேச டிராபி வழங்கப்பட்டது, ‘First in the Overall Order of Merit’ என்றும் அறிவிக்கப்ப்ட்டார். அறிவிக்கப்பட்டது. ‘Best in Flying’ என்ற விருதும் சப் லெப்டினென்ட் ஆர்.வி.குண்டே நினைவு புத்தக பரிசும் லெப்டினென்ட் ஹிடேஷ் சிங்கிற்கு வழங்கப்பட்டது. 22 வது எஸ்.எஸ்.சி அப்சர்வர் பாடநெறிப் பிரிவைச் சேர்ந்த சப் லெப்டினெண்ட் க்ரீஷ்மா ஆர் அவர்களுக்கு ‘Best in Overall Order of Merit’ என்ற பரிசும் வழங்கப்பட்டது.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News